சனி, 22 செப்டம்பர், 2012
வருடா வருடம் அதிகரித்துவரும் ஹஜ் ஏற்பாட்டு ஒழுங்கீனங்கள்
மௌலவி @ஜ.மீரா முகைதீன்
(முன்னாள் பிரதிப் பணிப்பாளர் மு.ச.ப.அ.திணைக்களம்) கடந்த பல வருடங்களாக இலங்கையில் ஹஜ் ஏற்பாட்டு விடயங்களில் பல ஒழுங்கீனங்கள் இடம்பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை. ஹஜ்ஜுக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்களாலும், திணைக்களத்தினாலும் முகவர் நிலையங்கள் மூலமும் ஹஜ் பயணிகள் விடயத்தில் கரிசனை காட்டி செயல்படுகின்றோம் என்ற கருத்தில் பத்திரிகைகளில் செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டதுடன் வானொலியிலும் செய்திகளை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இறுதியில் பார்த்தால் பயணிகளின் நலன் விடயத்திலும்à ஒழுங்குகள் விடயங்களிலும் பூச்சியமே தென்படுகின்றது. ஹஜ் பயண ஒழுங்குகளில் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக முகவர் நிலையங்களைத் தெரிவு செய்தல், கட்டணத்தை தீர்மானித்தல், கிடைக்கப் பெற்ற கோட்டாவை பகிர்வு செய்தல் ஆகிய இம் மூன்று விடயங்களிலும் சென்ற வருடத்தைப் போன்றே இவ்வருடமும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். ஹஜ் பயண ஏற்பாட்டிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட முகவர் நிலையங்கள் சென்ற வருடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வருட கோட்டா அதிகரிக்கப்படாததன் காரணமாக அம்முகவர் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தெரிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் எவ்வடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர், அவைகளுக்கான நேர்முகப் பரீட்சை எப்போது இடம்பெற்றது என்பன போன்ற விடயங்கள் பரம இரகசியமாக@வ உள்ளன. திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஹஜ் முகவர் நிலையங்களுக்கான பதிவு பிரதிவருடமும் இடம்பெறுவதே வழமை. அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவர். இம்முறை திணைக்களம் ஹஜ் முகவர்களைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரவில்லை, முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறவுமில்லை. அத்துடன் தாமே தெரிவு செய்து கொண்ட முகவர் நிலையங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் இல்லை. இவைகள் அனைத்தும் வழமைக்கு மாற்றமானதும் அத்துடன் இதுவோர் அரசாங்க திணைக்களம் என்ற வகையில் சட்டத்திற்கு முரணானதுமாகும். இதனாலேயே பல முகவர் நிலையங்கள் நியாயம் வேண்டி நீதி மன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹஜ் பயணத்திற்கான கட்டணம் முன்பெல்லாம் விலைமனுக்கோரல் மூலம் பெறப்பட்டு அதனை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி ஹஜ் பயணிகள் தாம் விரும்பிய முகவர் நிலையங்களுடன் தாம் விரும்பிய கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. இம் முறை சில வருடங்களாக பின்பற்றப்படுவதில்லை. சென்ற வருடம் திணைக்களம் ஆகக்கூடிய கட்டணம் 375,000 ரூபாவாக வரையறுத்திருந்தது. ஆனால் ஹஜ் பயணிகள் அதனை விடவும் கூடுதல் கட்டணம் செலுத்தியே ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இம்முறை அமைச்சர் பத்திரிகை விளம்பரத்தின் மூலமும் பணிப்பாளர் தாம் பங்குபற்றிய ஒவ்வொரு மாவட்ட கூட்டத்திலும் ஆகக் கூடிய கட்டணம் 425,000 ரூபா என திட்டவட்டமாகக் கூறியிருந்தும் இது வரை 95 வீதமான ஹஜ் பயணிகள் 525,000 ரூபாவு க்கும் மேற்பட்ட தொகையினைச் செலுத்தியே ஹஜ்ஜுக்காக பதிவு செய்துள்ளனர். ஒரு சிறிய தொகையினரே அனைத்து முகவர் நிலையங்களையும் அணுகி இயலாதபட்சத்தில் தமது கடவுச் சீட்டுக்களை திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை திணைக்களம் சில முகவர் நிலையங்களில் இணைப்பர். அம் முகவர் நிலையங்கள் இவர்களை மிகத் தூரத்தில் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து இம்முறையும் முகவர் நிலையங்கள் தாம் திட்டமிட்டுள்ள ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இலாபத்தினை அடைவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சென்ற முறை ஒருவர் மூலம் ஒரு இலட்சம் இலாபம் பெற்றவர்கள் இம்முறை அதனை விடவும் கூடுதல் இலாபம் பெறும் திட்டத்தில் இருக்கின்றனர். ஒரு ஹஜ் பயணியிடமிருந்து ஐந்து இலட்சத்திற்கு மேல் அறவிடும் முகவர் நிலையங்கள் ஹஜ் பயணிகளை மக்காவிலிருந்து அஸீஸிய்யா போன்ற தூர இடங்களில் தங்குமிட வசதிகளைச் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. ஆனால் 99 வீதமான முகவர் நிலையங்கள் கூடிய தொகையினை அறவிட்டும் ஹஜ் பயணிகளை ஹஜ் காலத்தின் போது தூரப் பிரதேசத்தில் தங்குமிட வசதிகளைச் செய்யும் திட்டத்திலேயே இருக்கின்றனர் என்ற செய்தியை உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன். அத்துடன் இம்முறை உலகிலிருந்து ஹஜ் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால் மக்காவில் தங்குமிடங்களின் கட்டணத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் அமைச்சருக்கும் மற்றும் பணிப்பாளருக்கும் நன்றாகத் தெரிந்தும் இவர்கள் ஏன்இதுவிடயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. எனது அனுபவத்தைப்பொறுத்த வரையில் இலங்கையிலிருந்து ஹஜ் செய்பவர்களில் மிக சொற்ப தொகையினரே செல்வந்தரான நிலையிலிருந்து பயணச் செலவினை பொருட்படுத்தாது ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர், மற்றைய அனைவரும் தாம் அரசாங்க உத்தியோகத்தராக இருந்து அல்லது தனிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகையில் ஹஜ் செய்பவர்களும், தாம் விவசாயம் செய்து சிறிது சிறிதாக சேர்த்த பணத்தில் ஹஜ் செய்பவர்களும், வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் தமது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரு நன்றிக்கடனாக பலர் சேர்ந்து பெற்றோர்களை ஹஜ்ஜுக்காக தயார் செய்யப்படும் ஹஜ் பயணிகளே அதிகம். இந்நிலையில் ஒருவரது கட்டணத்தில் ஒரு இலட்சம் ரூபாய் கூடுதலாக அறவிடப்படுகின்றது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அதுவோர் பாரிய தொகையாகும். அதே நேரத்தில் மேற் குறிப்பிடப்பட்ட 425,000 ரூபாவு க்கும் மற்றும் அதற்கு குறைவான தொகையிலும் அழைத்துச் செல்ல பல முகவர் நிலையங்கள் தயார் நிலையில் இருக்கும் போது அவர்களை புறக்கணித்திருப்பது ஏன் என பலரும் @கள்வியெழுப்புகின்றனர். இம் முறை வழமையாக இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2800 கோட்டா மாத்திரமே எனவும் வழமையாக அதிகரித்து வழங்கப்படும் தொகை இம்முறை வழங்கப்படாததினால் 2800 பேர் மாத்திரமே ஹஜ் செய்யும் வாய்ப்பு இருக்கின்றது. இக்கோட்டாவினை அமைச்சர் சில வாரங்களுக்கு முன்பு (கோட்டா கிடைக்கப்பெற்று 6 மாதங்களின் பின்) இறுதி நேரத்தில் தமக்கு நெருங்கிய முகவர் நிலையங்களின் ஆலோசனையுடன், முகவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இரவோடு இரவாக கோட்டா பகிர்வினை மேற்கொண்டுள்ளார். 150, 100, 50, 25 என தாம் விரும்பியவாறு பகிர்ந்தளித்துள்ளார். இவைகள் என்ன அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதற்கு சரியான எடுகோள்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 25 வருடங்களான ஹஜ் முகவராக இருந்தவருக்கும் சென்ற வருடம் ஹஜ் முகவராக பதிவு செய்தவருக்கும் 25 கோட்டாக்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று ஒரு முகவராக செயல்படுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் அனைத்து தகைமைகளையும் கொண்ட முகவர் நிலையங்களுக்கும், அனுபவத்தினைத் தவிர்ந்த வேறு எத்தகைமையினையும் கொண்டிராத முகவர் நிலையத்திற்கும் சம அளவான கோட்டாவே வழங்கப்பட்டுள்ளது. அனுபவத்தினைத் தவிர்ந்த வேறு எத்தகைமையும் கொண்டிராத முகவர் நிலையங்களுக்கு கோட்டா வழங்கப்பட்டுள்ளதுடன் மேற்கூறப்பட்ட அனைத்து தகைமையினையும் கொண்ட முகவர் நிலையங்கள் கோட்டா வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வேறு சில முகவர் நிலையங்கள் நீதிமன்றம் சென்றுள்ளன. அமைச்சர் முகவர் நிலையங்களுக்கிடையில் கோட்டாவினைப் பகிர முன்பதாக முகவர் நிலையங்களிடமிருந்து பயணத்திற்கான விலைமனுக் கோரலைப் பெற்று குறைந்த கட்டணத்தை சமர்ப்பித்துள்ள முகவர் நிலையங்களுக்கே கோட்டாவினை பகிர்ந்தளித்திருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாது கோட்டாவை பகிர்ந்தளித்ததினால் முகவர் நிலையங்கள் தாம் பெற்ற கோட்டாவினை சவூதியில் பதிவு செய்துவிட்டதினால் ஹஜ் பயணிகள் இதன் பின்பு இம் முகவர் நிலையங்களுடனேயே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதினாலும் முகவர் நிலையங்கள் தாம் நினைத்தவாறு கட்டணத்தை அதிகரித்துக் கொண்டனர். ஹஜ் பயணிகளும் தாம் பயணம் செய்ய நாடிவிட்டதனால் விருப்பம் இன்றியே இப் பெரும் தொகை கட்டணத்தை செலுத்தினர். (அமைச்சர் அவர்கள் தன் கையில் இருந்த மீன்களை கடலில் எறிந்து விட்டு திரும்ப வலை வீசும் நிலையே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது) அமைச்சருக்கும் பணிப்பாளருக்கும் இது தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. ஹஜ் விடயங்களை கவனிப்பதற்காக அரசாங்கம் இரு அமைச்சர்களுடன் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவையும் நியமித்தது. இதில் அமைச்சர்களான ஏ. எச். எம். பௌஸி க்கும் ஏ. ஆர். எம். ஏ. காதருகுமிடையே விரிசல் ஏற்படவே அமைச்சர் காதர் நீதி மன்றம் செல்லவே ஹஜ் விடயத்தில் மேலும் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. திணைக்களம் இவ்வருட ஹஜ்ஜில் செய்த ஒரு ஆக்கபூர்வமான பணி ஒன்று உண்டென்றால் அது ஹஜ் பயணத்திற்கான 2800 ஹஜ் பயணிகளையும் நேர காலத்துடன் தெரிவு செய்து கொண்டமையாகும். மேலும் அடுத்த வருடத்திற்கான 3000 பேர்களையும் தெரிவு செய்து வைத்திருப்பதுமாகும். (நான் இதுபற்றி எனது சென்ற வருட ஹஜ் சம்பந்தமான கட்டுரையில் வலியுருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது) எனவே அடுத்த வருட ஹஜ் பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள் (இணையதளத்தில் அவர்களது பெயர் விபரங்கள் இடப்பட்டுள்ளன) ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அடுத்த வருடத்தில் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்து கொள்வதற்கு இப்பொழுதிருந்தே செயல்பட @வண்டும். முகவர் நிலையங்களுக்காக ஹஜ் பயணிகள் என்ற நிலையை மாற்றி ஹஜ் பயணிகளுக்காக முகவர் நிலையங்கள் என்ற நிலையை உருவாக்க @வண்டும். ஹஜ் பயணம் ஒரு மார்க்க சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதினால் இதில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவை தலையிட்டு ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தினை முன்வைக்க வேண்டும் என எனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததுடன், அதன் தலைவரையும் நேரடியாக வேண்டியிருந்@தன். அதற்கு அதன் தலைவர் எனது திட்டத்தினை எழுத்து மூலம் கையளிக்குமாறு வேண்டியிருக்க நானும் நல்லதோர் திட்டத்தினை தயாரித்து கையளித்து, நிருவாகக் குழுவில் இது பற்றி ஆராய்ந்து மற்றும் பலரது ஆலோசனையையும் பெறு மாறு வேண்டினேன். ஒரு வருடமாகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது ஹஜ் சம்பந்தமான கலந்துரையாடல்கள் அமைச்சில் அல்லது திணைக்களத்தில் நடைபெறும் போது அவர்களின் பிரதிநிதியாக ஒரு சிலர் கலந்து கொண்டதன் மூலம் ஜம் இய்யதுல் உலமா சபையும் ஹஜ் சீர் கேட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்@ற கூற வேண்டியுள்ளது. எனவே பல வருடங்களாக ஹஜ் விடயத்தில் குளறுபடிகள் அதிகரித்து வருவதினால் தற்போது ஹஜ் ஒழுங்குகளை மேற் கொண்டுவருபவர்கள் அவர்களது இயலாத்தன்மையை வெளிக்காட்டியுள்ளனர். எனவே இவர்கள் இப்பணியிலிருந்து ஒதுங்கி இதனை திறம்பட செய்யக் கூடியவர்களுக்கு வழி விடுவதன் மூலம் ஹஜ் விடயங்களில் நல்லதொரு மாற்றத்தினை எதிர்பார்க்கலாம் என்பது எனது கருத்தாகும். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக