சனி, 22 செப்டம்பர், 2012
நூற்றாண்டு காணும் மருதமுனை அல்-மனாரின் வரலாற்றுப்பதிவுகள்
1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இக் கட்டுரை பிர”ரிக்கப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது தனது கல்வி நடவடிக்கைகளை 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்தது. 50 மாணவர்களுடன் தொடங்கிய இப் பாடசாலை 1ம், 2ம் வகுப்புக்களை முதலில் ஆரம்பித்தது. இப் பாடசாலை ஆரம்பத்தில் மருதமுனை அரசினர் ஆண்கள் பாடசாலை என்று பெயர் பெற்று இடைக் காலங்களில் பல்வேறு பெயர் மாற்றங்களுக்குட்பட்டு தற்போது அல் மனார் மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியாக பிரசித்தி பெற்ற இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்கு மருதமுனை மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த அதிகம் பேர் இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். அ@த@பான்று இன்று பல்@வறு துறைகளிலும் @தசிய மற்றும் சர்வ@தச ரீதியாக பிரகாசிக்கும் ஆயிரக் கணக்கா@னாரையும் இப் பாடசõலை கடந்த நூறு வருட காலத்தில் உருவாக்கியுள்ளது. இப்பாடசாலை தொடங்கிய காலந்தொட்டு தமிழ் சகோதரர்களே அதிபர்களாக கடமையாற்றியிருந்தனர். 1949 ஆம் ஆண்டு முதலே இதே கிராமத்தைச் சேர்ந்த அதிபர்கள் கடமையாற்றினர். இப்பாடசாலையின் பதினைந்தாவது அதிபராக 1969 ஆம் ஆண்டு ஏ.எச். முகம்மது அதிபர் அவர்கள் தலைமையாசிரியராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மூத்த மகன் எம். நயீம் சரிபுத்தீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியாக இப்பாடசாலையில் கடமையாற்றினார். இவர் தமிழ்ப்பாடத்தினை கற்பித்ததோடு சில காலம் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். இவரின் காலத்தில் வி.எம். இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து தமிழையும், வரலாற்றினையும் கற்பித்தார். இதே காலப்பகுதியில் ஏ.எல்.மீராமுகைதீன் ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவராக இருந்தார். கலைப்பட்டதாரியான இவர் பெரும்பாலான பாடங்களை கற்பித்துக் கொண்டிருந்தார். அடுத்த முக்கியமானவராக கே. அல்லாபிச்சை ஆசிரியர் காணப்பட்டார். இவர் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து சமூகக்கல்வி போன்ற பாடங்களை கற்பித்தார். 1970 களில் நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த மௌலவி ஆசிரியரான அஹமது லெவ்வை இப்றாலெவ்வை ஹாபிஸ் அவர்கள் மிகவும் முக்கியமானவர். சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டு வரையில் இஸ்லாம் பாடத்தை கற்பித்தார். இக் காலத்தில் ஏ.எம். அபூபக்கர் ஆசிரியர் அவர்களும் முக்கியமானவர். இவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகும். இதே காலப்பகுதியில் எம்.எஸ்.எம். நளீம் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருந்தார். மாணவர் சுற்றுலாக்களுக்கும் பொறுப்பாகவும் இருந்தார். பிற்காலத்தில் பிரதி அதிபராககவும் கடமையாற்றினார். எஸ்.இசட். சக்காப் மௌலானா அவர்கள் அல் மனாரைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவர். இவர் எல்லா வகுப்புகளுக்கும் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் ஆற்றலுள்ளவராக இருந்தார். பாடசாலை மாணவர் மன்றம், கலை கலாசார நிகழ்வுகள் போன்வற்றிற்கு பெரிதும் உதவினார். பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். இக் காலத்தில் எஸ்.எம். பழீல் அவர்கள் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமை புரிந்தார். பாடசாலையில் தயாரிக்கப்பட்ட எல்லா ஆங்கிலக் கடிதங்களும் இவரின் கையினாலேயே தட்டச்சு செய்யப்பட்டன. அத்துடன் விளையாட்டுத்துறைக்கும் முக்கிய பங்காற்றினார். இதே காலப்பகுதியில் ஐ.எல்.ஹபீப் முகம்மது ஆசிரியர் அவர்கள் ஒரு இளைஞராக பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். எஸ்.எம்.எம். மத்தீன் ஆசிரியர்கள் தமிழை ஒரு பாடமாக கற்பித்ததோடு விளையாட்டுக்கு பொறுப்பாக இருந்து சாரணியத்தையும் வளர்த்தார். அடுத்து எஸ்.எம்.எம்.எச். பாரி மௌலானா அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இருந்து கணித பாடத்தை அனேக வகுப்புக்களுக்கு கற்பித்தார். மேலும் மாணவர் வசதிக்கட்டணத்திற்கும் சஞ்சிகை போன்ற எழுத்தாக்கங்களுக்கும் பொறுப்பாக இருந்தார். இதே காலப்பகுதியில் இ. உதுமாலெவ்வை அதிபர் அவர்கள் அல் மனார் மஹா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். ஆரம்பப் பிரிவின் அபிவிருத்திக்கு பெரிதும் பாடுபட்டார். இதே காலப்பகுதியில் எம்.ஏ.எம். ஜெலீல் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தை கற்பித்தார். அடுத்து காதர் இப்றாஹீம் ஆசிரியர் சமூகக்கல்வியை கற்பித்துக் கொண்டிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். ஏ.எச்.எம். மஜீட் சேர் அவர்களும், மசூர் மௌலானா அவர்களும் கொழும்பு சென்று அமைச்சர் பதியுதீன் மஹ்மூதை சந்தித்து மருதமுனை அல்ஹிறா வித்தியாலயத்தை அல்-மனார் மஹா வித்தியாலயத்தடன் இணைத்தனர். இப்பாடசாலை தற்போது அல் மனார் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக செயற்பட்டுவருகின்றது. அத்துடன் விஞ்ஞான வர்த்தக வகுப்புக்களை ஆரம்பிக்கவும், தளபாடங்கள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் உதவினார் என்பது இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடிய விடயமாகும். 1976 ஆம் ஆண்டு ஏ.எச்.எம். மஜீட் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றார். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். அமைச்சர் அவர்களின் உதவியுடன் இப்பாடசாலையில் உயர்தர வகுப்பிற்கான விஞ்ஞான ஆயுவு கூடம் கட்டப்பட்டது. மஜீட் அதிபர் பாடசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெரும் சவால்கள் காத்திருந்தன. 1975ம் ஆண்டில் பெறுபேறுகள் திருப்தியில்லாததால் பெற்றோர் பாடசாலையின் மீது நம்பிக்கையற்றிருந்தனர். முதலில் அதிபர் அவர்களுக்கு பெற்றோரின் நம்பிக்கையைக்கட்டி எழுப்ப வேண்டிய தேவை நிரம்பியிருந்தது. எனவே 1976ம் ஆண்டின் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக க.பொ.த.சாதாரண தர மணவர்களுக்கு இரவு நேரங்களின் வகுப்புக்களை ஒழுங்கு செய்து இரவில் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தினார். பெண் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மகளான சித்தி நூறு நஜீமா மிகவும் முக்கியமானவர். இவர் மருதமுனையின் முதலாவது மௌலவியா ஆசிரியராவார். இவர் இப் பாடசாலையின் பெண் மாணவிகளின் விஷேட தேவைகளுக்கு பொறுப்பாக இருந்ததோடு இஸ்லாம், அறபு போன்ற பாடங்களை கற்பித்தார். அடுத்ததாக திருமதி ஜரீனா ஆசிரியை மருதமுனையின் முதலாவது ஆசிரியையும் விஞ்ஞான பாடத்திற்கு பெயர் போனவருமாகும். இவர் பெண் மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாக இருந்தார். அ. முகம்மது சஹாப்தீன் ஆசிரியர் அவர்களும் அ. முகம்மது முஸ்தபா ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவர்களாகும். இருவரும் சகோதரர்கள். மூத்த சகோதரர் வர்த்தக பாடத்தினையும் இரண்டாமவர் சமூகக்கல்வி பாடத்தையும் கற்பித்தனர். அடுத்ததாக இளம் ஆசிரியராக எஸ்.எல். ஜலால்தீன் ஆசிரியர் அவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். இவர் பயிற்றப்பட்ட உடற்கல்வி ஆசிரியராவார். சுகாதாரமும் உடற்கல்வியினையும் கற்பித்தார். இதே காலப்பகுதியில் பாண்டிருப்பில் இருந்து வருகை தந்த மூன்று ஆசிரியர்கள் முக்கியமானவர். பிற்காலத்தில் இந்து மஹா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த திரு. சோமநாதர் பாக்கியநாதன் அவர்கள் விஞ்ஞானக்கல்விக்கு புத்துயிரூட்டியவர். இரண்டாமவர் திரு. பாலசுந்தரம் பொன்னம்பலம் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். இவர் 6 முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். மூன்றாமவர் செல்வி. பொன்னம்பலம் ஆசிரியை. இவரும் பாண்டிருப்பைச் சேர்ந்தவர். இவர் விஞ்ஞானம் மற்றும் மனையியல் பாடங்களை கற்பித்தார். ஏ.எம். முசாதீக் ஆசிரியர் கணித பாடத்தில் பயிற்றப்பட்டவர். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவும் கணிதக்கழகத்திற்கு பொறுப்பாகவும் இருந்தார். இவரும் இளவயதில் காலமானார். இதே காலப்பகுதியில் ஏ. அலாவுத்தீன் அவர்கள் பயிற்றப்பட்ட கைவினை ஆசிரியராவார். இவர் பாடசாலையின் தமிழ் தின நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். இதே காலப்பகுதியில் ஏ.எம். அப்துல்லா ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக கடமையாற்றினார். இவர் சமூகக்கல்வி பாடத்தினை கற்பித்தார். எஸ்.எம். மூசா ஆசிரியர் அவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவிற்கு இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் போன்ற பாடங்களைக் கற்பித்தார். இவர்களுடன் எம்.பி. முகைதீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இப்பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்தார். பாடசாலை அதிபர் என்ற பொறுப்புக்கு மேலாக மஜீட் அதிபர் அவர்கள் பாடசாலை முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டுக் கொண்டிருந்தார். இதுவரை காலமும் பின்னேரங்களில் இரண்டு மணிக்கு பூட்டப்பட்ட பாடசாலைக் கலாசாரத்தை இரவு பத்து மணிவரை திறந்து வைப்பதற்கான ஏற்பாட்டினை செய்ததோடு விரும்பிய நேரம் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து போவதற்கான பழக்கத்தையும் ஏற்படுத்தினார். பொதுப் பரீட்சைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாராந்த, மாதாந்த பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு செய்தார். அக் காலத்தில் கணணி வசதி இல்லாததால் அதிபர் அவர்களே வினாப் பத்திரங்களை இரவு முழுவதும் இருந்து தட்டச்சு செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்தார். எனவே தொகுத்து நோக்கும் போது மருதமுனைக் கிராமத்தின் கல்வி மேம்பாட்டிலும் சமய கலாச்சார முன்னேற்றத்திலும், எதிர்கால சந்ததியினரின் சிறப்பானதும் ஒளிமயமானதுமான எதிர்காலத்திற்கு எமது மாணவச் செல்வங்களின் ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பண்பாட்டு விருத்திக்கும் மஜீட் அதிபர் அவர்கள் பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுக்கூறலாம். இவரின் சேவைகள் பாராட்டப்பட வேண்டியதும் பாடசாலை வரலாற்றுப் பதிவேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதுமாகும். - எம்.எம். நெபளல்SLPS, SLAS மருதமுனை. |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக