சனி, 22 செப்டம்பர், 2012
பசித்த பிராணிகளும் உணவுத்தட்டும்
-மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி)
எம்.ஏ (லண்டன்)
வெறி கொண்ட பிராணிகள் உணவுப் பாத்திரங்களை நோக்கி வேகமாகப் பாவதைப் போல மற்ற சமூகத்தவர் ஒரு காலத்தில் முஸ்லிம்களை நோக்கிப் பாய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எதிர்வு கூறினார்கள். அந்த நிலைமையை இன்று பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் உம்மத் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை, அகதி வாழ்க்கை, கொலை, கொள்ளை, அழிவு, கற்பழிப்பு, வறுமை, அறியாமை என முஸ்லிம் சமூகத்தின் துன்ப துயரங்களின் பட்டியல் நீளுகின்றது.
சர்வதேச ரீதியில் பலஸ்தீன், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், செச்னியா, சிரியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் அழுகுரல்கள் எமது காதுகளை வந்தடைந்த வண்ணமுள்ளன. அவற்றையெல்லாம் மிஞ்சி விடும் வகையில் மியன்மார் (பர்மிய) முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் அழிவு நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களை பலாத்காரமாக மத மாற்றுதல் உலகம் எங்கும் இல்லாத வகையில் மியன்மாருக்கே உரிய பாதகச் செயலாக விளங்குகின்றது.
சீன முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இரும்புத் திரைக்குப் பின்னால் அம் முஸ்லிம்களின் மத உரிமைகளும் மனித உரிமைகளும் பலாத்காரமாக மீறப்படுகின்றன. அம்மக்கள் மீதான நீண்ட கால அடக்கு முறைகள் தற்போதுதான் மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரிய வருகின்றன.
அண்டை நாடான இந்தியாவில் இந்துத் தீவிரவாதிகளின் கை எப்போதுமே ஓங்கி இருக்கும். முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு அங்கு குறைவே இருக்காது. பெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம்கள் கையாலாகாதவர்களாகவும் அறியாமை, வறுமை என்பவற்றால் பீடிக்கப்பட்டவர்களாகவுமே வாழுகின்றார்கள். இந்தியா மிகவும் பரந்த, விசாலமான நாடு என்பதால் முஸ்லிம்களுக்கு நடைபெறுகின்ற அநியாங்களை வெளியுலகு கண்டு கொள்வதில்லை.
அடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வருவதையறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சியடையவும் வேண்டும். அதேவேளை இஸ்லாத்துக்கெதிரான தீய பிரசாரங்களும் முஸ்லிம்கள் மீதான துவேஷமும் (கீச்ஞிடிண்ட்) முஸ்லிம்களுக்கெதிரான தேசியவாதமும் (ச்ணாடிணிணச்டூடிண்ட்) வளர்க்கப்படும் இடங்களாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. இந்நாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைக்கு ஸியோனிஸமும் தீவிர வலதுசாரிக் கிறிஸ்தவமும் காரணிகளாக விளங்குகின்றன.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய நெறி முறைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் கணிசமான அளவு இருப்பதைப் போலவே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட வழியிலும் குற்றச் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபடும் முஸ்லிம்களும் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களின் பெயர்களையும் இனத்தையும் வைத்தே மேலைத்தேய நாடுகள் முஸ்லிம்களை கணிக்கின்றன. இஸ்லாத்தின் மீது மேலை நாட்டவர் வெறுப்படைய இவர்களின் நடவடிக்கைகள் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் இந்தியா, பர்மா, சீனா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் வெளிப்படையான வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்வதில்லை.
ஆனால் பொறுப்பற்ற முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகி இரண்டாந்தரப் பிரஜைகளாக மேல் நாட்டு சமூகத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். அம் முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை சீர்த்திருத்திக் கொள்வார்களானால் இஸ்லாம் மேலும் வேகமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை. இது மேல்நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா நாட்டுக்குமே பொருந்தும்.
அடுத்து ஆபிரிக்கக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் இதனை முஸ்லிம் கண்டம் என வர்ணிக்கும் அளவுக்கு அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகின்றது. மொத்த ஆபிரிக்காவின் 1051 மில்லியன் மக்களில் முஸ்லிம்கள் 554.32 மில்லியனாகவும் சுதேச நம்பிக்கையைப் பின்பற்றுவோர் 100 மில்லியனாகவும் கிறிஸ்தவர்கள் 304 மில்லியனாகவும் உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் பல ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. உள்நாட்டுப் போர், கல்வி அறிவின்மை, இன கோத்திர முறுகல் என்பவை முஸ்லிம்களை பின்தங்கிய சமூகமாகவும் கிறிஸ்தவ உலகின் உணவுத்தட்டை போலவும் வாழ வைத்துள்ளது.
சர்வதேச ரீதியில் எமது சகோதர முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற துன்ப துயரங்களையும் அவலங்களையும் விரிவாக ஆராவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவற்றை மேலோட்டமாக தொட்டுக்காட்டிய பின்னர் நம் நாட்டில் நாம் படும் அவஸ்தைகளையும் நாளாந்தம் நாம் எதிர்நோக்கும் சவால்களையும் சற்று விரிவாக நோக்குவதே எமது நோக்கமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் எமது நீண்ட கால வரலாற்றில் ஏனைய சமூகங்களுடனான உறவு பெரும்பாலும் சுமுகமாகக் காணப்பட்டு வந்துள்ளது. எழுபதுகளின் இறுதிப்பகுதியில் புலிகளின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் முன்னர் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர பெரிய அளவில் முஸ்லிம்களின் இருப்புக்கோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சோந்த மண்ணிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவில்லை.
எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த போது இலக்கையும் இலட்சியத்தையும் மறந்து தமது துப்பாக்கிகளை நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பக்கம் நீட்டினார்கள். பசித்த பிராணிகள் உணவுத் தட்டை நோக்கிப் பாவதைப் போல அப்பாவி முஸ்லிம்கள் மீது பாந்து வெறியாட்டம் ஆடினார்கள். அக்காலப்பகுதியில் வட கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கஷ்ட நஷ்டங்கள் உயிர் உடமை இழப்புக்கள் எண்ணிடலங்காதவை. எதற்கும் ஒரு முடிவு இருப்பதைப்போல் புலிகளின் திசைமாறிய போராட்டத்துக்கும் ஒரு முடிவு வந்தது.
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக