சனி, 22 செப்டம்பர், 2012
திருட்டுத் திருமணங்கள்....
முஸ்லிம்களின் நடத்தைகளே இன்றைய இன விரிசல்களுக்கும் பொறாமைக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனலாம்.
‘காதிக்கோடு’ வழக்குகளின் மூலம் கசப்பான அனுபவங்களையே பெறமுடிகின்றன.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரியின் மன அழுத்தத்தை வாசிக்கும் போது,‘நாங்கள் ஈமான் கொண்ட முஸ்லிம்களா?’ என்ற சந்தேகம் எழுகின்றது.
‘நாங்களே, தொழவில்லை, வேறு மதத்திலிருந்து வந்த நீ தொழத்தேவையில்லை என்று இஸ்லாத்தின் ஆணிவேரையே அசைக்கும் போக்கைச் ஜீரனிக்க முடியவில்லை.
அந்நிய மதத்தவர்கள் கூட தொழுபவர்களைக் கண்ணியப்படுத்தும்போது, முஸ்லிமானவர்கள் கேவலமாகத் தொழுகையை விமர்சிக்கலாமா?
வருமான வசதியில்லாத நிலையில் இருக்கும் போது, அவளின் வருமானத்தில் குடும்பம் நடத்த முடியுமானால், அவளது உணர்வுகளுக்கு ஏன் இடமளிக்கக் கூடாது. இது முனாபிக்தனமான போக்கல்லவா? நன்றி கெட்டச்செயலல்லவா?
மகன், வெளிநாட்டுப்பணம் அனுப்புவதால், ஏற்பட்ட அகங்காரம் இன, மத உறவுகளை விட்டுவந்தவளை விலக்கிவிட்டு வேறு ஒரு திருமணம் செவிக்க நினைப்பது துரோகம் இல்லையா.
மாற்று மதப்பெற்றோர் இதை ஒரு பிரச்சினையாக்கி இனமோதல்களுக்கு இட்டுச் செல்லலாமல்லவா? இதனால், முஸ்லிம் சமூகமே தலை குனியவேண்டிய நிலை ஏற்படாதா?
தம்புள்ள முதல் தெதுரு ஓயா வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இன முறுகல்களுக்குப் பின்னணியான காரணிகள் எமது நடத்தையாகவே இருப்பதை மறந்துவிடக்கூடாது.!
இன்று, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல வழிகளிலும் பலவீனப்பட்டு பழிவாங்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு மேற்குலகம் தூபமிடுவதையும் காணுகின்றோம்.
பிரான்ஸ், மியன்மார் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு முடிவு காண முடியாத நிலையில் இருக்கும் நாம், இதுபோன்ற மாற்றுமத விரிசல்களை ஏற்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமானதா என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
எம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்ளும் காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கே செயும் கண்ணியமென்பதை இருபாலாரும் மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.
திருட்டுத் திருமணங்களுக்குத் துணைபோகும் திருமணப் பதிவாளர்கள் - மௌலவிமார்கள் கேவலம் பணத்திற்காக இஸ்லாத்தை விலைகூறும் போக்கு, வெறுக்கத்தக்க இழிசெயலாகும்.
பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு பெண்ணுக்கு இரண்டு திருமணங்களைச் செது வைத்த பதிவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?
-சாரணா கையூம்
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக