சனி, 22 செப்டம்பர், 2012

சமூகத்தின் நன்மை கருதிய தீர்மானத்திற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்க வேண்டும்

தலைமைத்துவத்திற்கு உலமாக்கள் ஆலோசனை

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி எத் தரப்புடன் இணைந்தால் சமூகம் அதிகூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அத்தரப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபை ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உலமாக்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை ஆட்சியில் எந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்குவது என்று நேற்றும் நேற்று முன்தினமும் தொடராக ஆலோசனை நடாத்தியது.

நேற்று முன்தினம் காலி முகத்திடல் ஹோட்டலில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் உலமாக்கள் குழுவொன்றும் கலந்து கொண்டது.

உலமாக்கள் குழுவிற்கு தலைமை வகித்த அம்பாறை மாவட்ட  ஜம்மியத்துல் உலமா சபைத்  தலைவர்  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

‘முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். தேர்தலில் தெரிவு செயப்பட்டவர்கள் கட்சியின் உண்மையான விசுவாசிகளாக இருக்க வேண்டும்.  சமூகத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். பிரிந்து போவதனையோ பிளவுபடுத்துவதையோ அனுமதிக்க முடியாது.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும். மார்க்க அடிப்படையில் மசூராக்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறப்பட்டு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தினதும்  கட்சியினதும் நலனே  இலக்காக இருக்க வேண்டம். சுய நலன்களுக்காக பிரிந்து போகக் கூடாது. 

இதனை  உறுதி செது கொள்வதற்காகவே நீங்கள் பைஅத் செதிருக்கிறீர்கள் என்று உலமாக்கள் அறிவுரை வழங்கினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையில் வெற்றியீட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கட்சியைப் பாதுகாப்பதாகவும் பிளவுபடாமல் பிரிந்து விடாமல் செயற்படுவதாகவம் உலமாக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினார்கள்.

கலந்துரையாடலில் உலமாக்களான மௌலவி ஐ.எல்.எம். ஹாஷிம் (பாலமுனை), மௌலவி ஏ. அபூ உபைதா (மருதமுனை), மௌலவி (ஏ.எல். நாகூர்கனி (நற்பிட்டிமுனை),  மௌலவி எம்.எல்.எம்.பஷீர் (சம்மாந்துறை), மௌலவி எம்.எல். பைசல் (ஒலுவில்), மௌலவி தௌபீக் (சம்மாந்துறை)  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

அரசுடனும் கூட்டமைப்புடனும் ஹக்கீம் இன்று பேச்சுவார்த்தை

இரு தரப்பினதும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எட்டுவதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக பல மணி நேரம் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இருப்பினும் ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் இரு தரப்புகளும் வழங்கும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவை எட்டுவது எனவும் நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலும் நேற்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  வாசஸ்தலத்திலும்   இரு வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. 

இக் கூட்டங்கள் பல மணித்தியாலங்களாக  நீடித்தபோதிலும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. கட்சியின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் பெருந்திரளான ஆதரவாளர்கள் நேற்று ஹக்கீமின் வாசஸ்தலத்தின் முன்னால் குழுமியிருந்தனர். 

மாகாணசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா. யாருடன் இணைந்து ஆட்சியமைக்கும் என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

மு. காங்கிரஸ் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை கட்சி எடுத்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் அரசை ஆதரிப்பது  தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கில் ஆட்சியமைப்பதனையே அங்குள்ள முஸ்லிம்களும் ஏனையவர்களும் விரும்புகின்றனர்.

கிழக்கில் அரசுக்கெதிராக 400,000 வாக்குகள் உள்ளன. 200,000 வாக்குகளே அரசுக்கு அங்கு உள்ளது. இந்நிலையில் மு.கா. மக்கள் விருப்பை நிாரகரித்து வரலாற்றுத் துரோகம் ஒன்றை செயக்கூடாது.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவினை பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம் முதலமைச்சர் உள்ளிட்டவற்றை தருவதற்கு த.தே.கூ. தயாராகவுள்ள நிலையில் அச்சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக்கூடாது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்துக்காகவே தலைவர் அஷ்ரப் காத்திருந்தார்.  இன்று அதற்கான வாப்புக்கள் ஏற்பட்டுள்ளது.  அதனை சரியாக பயன்படுத்தி வாக்களித்த மக்களின் விருப்பத்தினை மு.கா. நிறைவேற்ற வேண்டும்.

எங்கு எத்தனை கூட்டங்களை வைத்து முடிவு எட்டப்பட்டாலும் அது மக்களின் விருப்பத்தினை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


425,000 ரூபாவுக்கு மேல் வழங்க வேண்டாம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு பௌசி அறிவுறுத்தல்

(ஏ.ஆர். ஏ.பரீல்) 
ஹஜ் பயணத்துக்கான கட்டணம் 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என ஹஜ் குழு நிர்ணயித்திருக்கிறது. குறித்த தொகைக்கு மேலதிகமாக  ஹஜ் முகவர்கள் கட்டணம் அறவிட்டால் எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில்
பதிவிலக்கங்கள்  1 முதல் 3155 வரையிலான பதிவுகளை மேற்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள முகவர் நிலையங்களின் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. முகவர் நிலையங்கள்  ஏதாவது காரணம் கூறி விண்ணப்பதாரிகளை  நிராகரித்தாலும் அவர்களுக்கான ஹஜ் ஏற்பாடுகளை நிறைவேற்றுவது ஹஜ் குழுவின் பொறுப்பாகும் என ஹஜ் குழுவின் இணைத்தலைவரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச். எம். பௌசி தெரிவித்தார்.

சவூதியில் மக்கா மதீனா அஸீஸியா போன்ற இடங்களில் அறவிடப்படும் ஹஜ் பயணிகளுக்கான கட்டணம் மு அல்லிம் கட்டணம், உணவு விமான இரு வழி பயணக்கட்டணம்  என்பவற்றைக் கருத்திற் கொண்டே குறிப்பிட்ட ஹஜ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தில் சோகுசான வசதிகளை எதிர்பார்க்கும் பயணிகள் முகவர் நிலையங்களில் அதற்கான அதிகரித்த கட்டணம் செலுத்துவதில் ஆட்சேபனையில்லை. ஆனால் அவ்வாறான வசதிகளுக்கு எழுத்து மூலமான உறுதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பயணத்தின் பின்னரான முறைப்பாடுகள் செவதற்கு இது அத்தாட்சியாக இருக்கும் எனவும் பௌஸி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

 சில ஹஜ் முகவர்கள் ஹஜ் குழு நிர்ணயித்த கட்டணத்தையும் விட கூடுதலான தொகையை அறவிடுவதற்காக நான் போதியளவு கோட்டாக்களை வழங்கவில்லை. கோட்டா குறைக்கப்பட்டு விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றது. இதனை பயணிகள் நம்பி ஏமாறவேண்டாமெனவும் பௌஸி கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனையை சோகத்துக்குள்ளாக்கிய விபத்து

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து கவலைப்படாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள்.

அக்கரைப்பற்று-கல்முனை  பிரதான வீதியின் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட தியேட்டரடிக்கும் அல்லிமூல சந்திக்கும் இடையிலுள்ள  பகுதியில்  கடந்த 2012.08.28 செவ்வாக்கிழமை இரவு இவ் விபத்து இடம்பெற்றது. முச்சகர வண்டி ஒன்றும் தனியார் சொகுசு பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்தது.

கல்முனைக்குடி-14 புதிய வீதியில் இலக்கம் 16 இல் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் கல்முனைக்குடி-05 சாஹிபு வீதியில் வசித்து வந்த 50 வயதுடைய ஆட்டோ சாரதி எம்.இஸ்ஸதீனுமே (மூன்று பிள்ளைகளின் தந்தை) இச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவார்கள்.

அன்றைய தினம் இரவு 8.00 மணியளவில் கல்முனையிலிருந்து பாலமுனையை நோக்கி செல்லும் போது 8.15 மணியளவில் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்குச் செல்வதற்காக கல்முனையை நோக்கி வந்து கொண்டிருந்த சுப்பர் லைன் சோகுசு பஸ் வண்டி இவர்கள் பயணித்த முற்சக்கர வண்டியுடன் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டது.

 பாலமுனை கிராமத்தில் வசிக்கும்  தமது சகோதர் சிறாஜின்  வீட்டிற்கு செல்வதற்காகவே இவர்கள் குடும்பத்தோடு தமது பயணத்தை தொடர்ந்தனர்.

சிறாஜ் குவைத் நாட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி நாட்டிற்கு அண்மையில் வருகை தந்து மீண்டும் 2012.8.29 ஆம் திகதி குவைத் நாட்டிற்கு செல்ல இருப்பதால் அவரை குடும்பத்தோடு சென்று சந்தித்துவிட்டு வரும் நோககிலேயே இவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர். 

45 வயதுடைய ஜெமினா, ( இரு பிள்ளைகளின் தா ) கல்முனை பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்த 35 வயதுடைய எம்.எச்.றிஹானா, அவரின் பிள்ளைகளான மூன்று வயதுடைய எச்.அம்ஹர் அஹமட், ஒரு வயதும் மூன்று மாதமுடைய அக்தாஸ் அஹமட் மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று கொண்டிருந்த 26 வயதுடைய சகோதரி எம்.எச்.இர்பானா ஆகியோரே இவ்வாறு முச்சகர வண்டியில் பயணித்து இறுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களாவர்.

அதே நேரம் றிஹானாவின் கணவரான  சாந்தமருது அல் ஹிலால் வித்தியாலய ஆசிரியரான எம்.எம்.புஹாரி தனது மோட்டார் சைக்கிளில் அவர்களோடு செல்ல தயாராகினார்.

இவ்வாறு நிந்தவுவூர் பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும் போது சுப்பர் லைன் சோகுசு பஸ் வண்டி ஒன்று ஏதோ ஒரு வாகனத்தை மோதி விட்டு மிக வேகமாக வருவதை புஹாரி ஆசிரியர் உணர்ந்து கொண்டார். அச்சமயம் இந்த பஸ் வண்டி மோதியது தனது குடும்பத்தவர்கள் பயணித்த முச்சகர வண்டியைத்தான் என்பதை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

துரதிஷ்டவசமாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்றபோதுதான் இதில் பாதிக்கப்பட்டது தனது குடும்பத்தவர்கள்தான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

முச்சகர வண்டியில் பயணித்த 6 பேரில் ஐவர் ஸ்தலத்திலேயே உயிர்நீத்துவிட்டனர்.  ஒரு சிறுவர் மாத்திரம் குற்றுயிராகக் காணப்பட்டார். அவரை நிந்தவூர் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதிலும் வழியிலேயே அவர் உயிர்நீத்துவிட்டார்.

இந்த விபத்தில் உயிர்நீத்த அனவைரது ஜனாசாக்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஊரே சோகத்தில் ஆழ்ந்தது.

மறுநாள் ஒரே குடுபத்தைச் சேர்ந்த ஐந்து ஜனாஸாக்களும் கல்முனை நூராணியா தைக்கா மையவாடியிலும், ஆட்டோ சாரதியின் ஜனாஸா கல்முனை  கடற்கரைப் பள்ளி மையவாடியிலும் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க நல்லடக்கம் செயப்பட்டது.
அல்லாஹ் அவர்களின் குடும்பத்தினருக்கு நல்ல ஆறுதலை கொடுப்பதுடன் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.
இதேவேளை பஸ் வண்டியுடன் உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பஸ் சாரதி மேலதிக விசாரணைக்காக சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று நாட்டில் விபத்துக்கள் அளவுக்கதிகமாக இடம்பெற்று வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. வாகனச் சாரதிகளின் கவனயீனமே இதற்குப் பிரதான காரணமாகும். நிந்தவூரில் ஏற்பட்ட குறித்த விபத்து நமக்கெல்லாம் படிப்பினை தருவதாகும். எனவே வாகனச் சாரதிகள் இதுவிடயத்தில் கவனமாக நடந்து கொள்வது அவசியமாகும்.

அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வடமத்திய மாகாண சபையில் குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சார்பாக பிரதிநிகளின் தேவையானது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது கவனிக்கத்தக்கது.கடந்த காலங்களைவிட சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செது அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு தொடர்ச்சியாக ஒலித்துவந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை காப்பற்றப்படுமா அல்லது இழக்கப்படுமா என்பதே இன்று சகல தரப்பினரதும் அவாவாக உள்ளது. சுமார் 10 வீதம் வாழ்கின்ற இவ் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்களின் குரல் வடமத்திய மாகாண சபையில் ஒலிப்பதற்கு குறைந்தபட்சத் தேர்வுகளையாவது இம்மக்கள் அடைந்து கொள்ளவேண்யதை சகலரும் உணர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 


அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் இருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்ற ஆவு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவல்லை. ஏனைய வாக்குகளில் சுமார் 65 வீதாமானவை ஐ.தே.கட்சிக்கு அல்லது அதன் கூட்டணிக்கு அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

இந்த வாக்காளர்களால் இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட மாகாணப் பிரதிநிதிகளை தமது சமூகத்தின் இருப்பு சார்பாக இந்த மக்கள் தெவு செயய வேண்டும் என்ற அவாவுடன் இக்குறிப்புகளை பதிவு செய விளைகிறேன்.
மாகாண சபை தொடங்கிய முதலாவது தேர்தல் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செயப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்போதைய அரசாங்கமான ஐ.தே.கட்சியைப் பிரதிநித்துவம் செதிருந்தனர்.
அதற்குப் பிற்பட்ட எல்லா தேர்தல்களிலும் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக மு.கா. வேட்பாளர் ஒருவர் தெரிவு செயபட்டே வந்துள்ளர். கடந்த தேர்தலில் ஐ.தே. கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மு.கா. போட்டியிட்டதனால் அந்தக் கூட்டணியிலிருந்து ஐ.தே. கட்சியின் முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தார். 
கடந்த மாகாண சபைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், மு.காங்கிரஸ் ஐ.தே.க. கூட்டணியிலும், அ.இல.முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சு. முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டதுடன், தேசிய காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. 
கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் ஐ.தே.க.கூட்டணியில் போட்டியிட் இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவு செயப்பட்டனர்.அதில் ஒருவர் சுமார் 18000 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.   

தனித்துப் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் சுமார் 2500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் சுமார் 8500 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.    
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி முஸ்லிம் வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியின் முஸ்லிம் வேட்பாளர் சுமார் 11500 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 
ஆனால் இம்முறை தேர்தல் களம் சற்று மாறுபட்ட தோற்றத்தை காட்டி நிற்கின்றது. மு.கா.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதனால் தனது வேட்பாளர் ஒருவரையும் ஐ.ம.சு. முன்னணி ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது. தவிர ஐ.தே.கட்சி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் இம்முறை இரு முனை தீவிரப் போட்டி முஸ்லிம் பிரதிநித்துவத்திற்காக நிலவுகின்றதை அவதானிக்க முடிகின்றது. 
இம்முறை ஐ.ம.சு. முன்னணியுடன் மு.கா. இணைந்து போட்டியிடுவதால் ஐ.ம.சு. முன்னணிக்கு சற்று பலமான இருப்புத் தென்படுகின்றது. அதேவேளை ஐ.தே.கட்சி தமது பங்கிற்கு 2 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளதால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட இடமிருப்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த மாகாண சபையில் ஐ.ம.சு.முன்னணி 220000 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும் ஐ.தே.க 140000 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும் ம.வி.மு 16000 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. 
கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்டு 13 ஆம் இடத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளைப் பெற்றிருந்த அதேவேளை ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு 7ம் நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 14000 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இம்முறை களநிலைவரத்தின்படி ஐ.ம.சு. முன்னணியின் வெற்றி என்பது உறுதியிட்டுக் கூறமுடியுமாக இருக்கின்றது. இதனை ஐ.தே.க.வின் பிரசார மேடைகளிலேயே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இரு பெரும் கட்சிகளில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெற வேண்டுமாயின் இரு கட்சிகளிலும் முன்னர் குறிப்பிட்ட இறுதிநிலை வேட்பாளர்களின் அடைவை குறைந்தபட்சம் தொட வேண்டும். 
அப்படியாயின் அநுராதபுர மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செது கொள்வதற்கு பின்வரும் உத்திகளை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
1. சுமார் 60 வீதமான மக்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது
2. சுமார் 70 வீதமான மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். 

3. அத்துடன் வாக்களிக்கின்ற முஸ்லிம்கள் இரு கட்சிகளிலுமுள்ள முஸ்லிம்கள் இருவருக்கும் வாக்களிப்பதுடன் அடுத்த விருப்பு வாக்கை முதல் தர ஓரிரண்டு வேட்பாளர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.
4. அல்லது திட்டமிட்ட அடிப்படையில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளுடன் 50:50 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் அளிக்கப்படுதல் வேண்டும்.இந்த முறைகளின் ஊடாகவே முஸ்லிம் பிரதிநித்துவம் வெற்றி கொள்ளப்பட வாப்பிருக்கிறது. 

இச்சைகள் எல்லை மீறக் கூடாது


ஏ.ஆர்.எம்.ஜிப்ரி (Med),
அதிபர், ஜீலான் மத்திய கல்லூரி, 
 பாணந்துறை

இன்றைய உலகில் மனிதனின் அறிவியல் ஆற்றலின் வளர்ச்சியும் ஒழுக்க விழுமியப் பண்புகளின் வீழ்ச்சியும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகச் செல்வதைக் காணலாம். ஒரு சாரார் அறிவியல் புரட்சியில் செல்வாக்குச் செலுத்தும் இக்கால கட்டத்தில் மற்றுமொரு சாரார் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனிதனின் நேர்மையும் நேயமும் ஒரு பக்கத்தில் இருக்கும் போது மறுபக்கத்தில் பொயும் புரட்டும் ஊழலும் லஞ்சமும் மதுவும் மாதுவும் என சிலர் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மறைப்பாங்கான வழிகளில் செல்வோரை நேர் வழிப்படுத்துவது நம் ஒவ்வொருவோர் மீதும் பொறுப்பாகவிருக்கிறது.

அல்லாஹுத்தஆலா நாயன் தன் அருள் மறையிலே இப்படிக் கூறுகிறான். ஆத்மாவின் மீதும்; அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்; அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக.  எவன்(பாவங்களை விட்டும் விலகிக் கொண்டானோ) அவன் நிச்சயமாக சித்தியடைந்து விட்டான்.  எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்\"(91:7-10)

மனிதனை நேர் வழியில் செல்லாமல் தடுப்பதற்கான எத்தனையோ தடைகளை ஷைத்தான் இம்மையிலே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது வழி கேட்டில் சென்று கொண்டிருப்போரின் ஈருலக வாழ்வுமே இருள் சூழ்ந்ததாகிவிடுகிறது.

எல்லை மீறிய இச்சைகளின் வெளிப்பாடுதான்  பெரும் பாவங்களில் ஒன்றான விபச்சாரம். இதற்கு இஸ்லாம் வரையறை செயப்பட்ட கட்டாயத் தண்டனைகளை வகுத்துள்ளது. திருமணமாகாதவர் இதனைப் புரிந்தால் 100 கசையடிகளும் திருமணமானவர் புரிந்தால் கல்லெறிந்து கொல்லுவதுமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதனைவிட மறுமையிலும் தண்டனைகள் காத்திருக்கின்றன. மேலும் இம்மையில் பல்வேறுவிதமான நோகளையும் அல்லாஹுத்தாலா ஏவி விடுகிறான். அவனே அருள் மறையில் இப்படிக் கூறுகிறான். 

மனோ இச்சையைப் பின்பற்றாதீர். (பின்பற்றினால் அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தவறி விடும்படி செயும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவதன் காரணமாக அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனை உண்டு. (38:26)

உலகெங்கும் உள்ள நாடுகளில் சுமார் ஐம்பது மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதனின் பல வகைப்பட்ட பாலியல் நடத்தைகள் மூலமாகவே இது உண்டாகிறது. பொதுவாக இலங்கையில் கோணோரியா (Gonorrhoea) சிபிலிசு (syphyilis) ஹேர்பீஸ்(Herpes கிளமிடியா (Clamydia)) பாலுறுப்பு உண்ணிகள், சிறுநீர்வழி அழர்ச்சி, எயிட்ஸ் முதலிய பாலியல் தொற்று நோகள் காணப்படுகின்றன. 

இந்நோகள் சிலவற்றின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படலாம். அல்லது உடலுக்குள்ளேயே இருந்து காலப் போக்கில் வெளிக்காட்டப்படலாம். கர்ப்பிணிப் பெண்களில் இவ்வாறான நோகள் ஏற்படும் போது கிடைக்கும் குழந்தைகளி லும் பல்வேறு விதமான பாதிப்புகள் நிகழ்ந்து விடலாம். கருச்சிதைவு, இறந்து பிறத்தல், அங்கக் குறைபாடு, மெதுவான மூளை வளர்ச்சி போன்றன இவற்றுள் சிலவாகும். இவற்றை விட எயிட்ஸ் நோயும் தொற்றிக் கொள்ளலாம். 

முதன் முதலில் 1981இல் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் நோயாளர்கள் சிலரில் எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் இனங் காணப்பட்டன. 1983 இல் பிரான்ஸைச் சேர்ந்த லூக்மொண்டிக்கயர் அமெரிக்கரான றெபேர்ட் கலோ ஆகிய விஞ்ஞானிகளே ஏஐங வைரசை முதன் முதலில் இனங்கண்டனர். ஏதட்ச்ண ஐட்ட்தணணி ஈஞுஞூடிஞிடிச்ணஞிதூ ஙடிணூதண்  (மானுட நிர்ப்பீடண குறைபாட்டு வைரஸ்) என்ற பெயரைச் சூட்டியவர்களும் இவ் விஞ்ஞானிகளே ஆவர். இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1986 இல் இனங்காணப்பட்டார். அதன் பின்பு சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டனர். 

ஏஐங தொற்றைப் பூரணமாகக் குணப்படுத்தத்தக்க எந்த மருந்தும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் அது  தொடர்பான ஆராச்சிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இன்றைய மருத்துவத்துறைக்கு இது பெரும் சவாலாகும். இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து விடுபட மனிதன் தன் மன இச்சைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ வேண்டும். இதனை இஸ்லாம் எப்போதும் வலியுறுத்தியே வருகிறது. 

உலகில் வாழும் எயிட்ஸ் நோயாளிகளின் பட்டியலில் இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் விலகியே காணப்படுகின்றன. இஸ்லாமிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வோர் ஒருபோதும் இதற்குள் சிக்கி விடமாட்டார்கள்.

இஸ்லாம் மனித இச்சைகளை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தி பிரமச்சாரியத்தை ஆதரிக்கும் மார்க்கமல்ல. இச்சைகளை முறைப்படி நிவர்த்தி செது கொள்வதற்கான வழிவகைகளை தெட்டத் தெளிவாக வரையறை செதுள்ளது. ஆண்களும் பெண்களும் உரிய வயதில் விவாகம் செது கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. விவாகத்தை ஒரு சுன்னத்தான வணக்கமாகவே ஆக்கியுள்ளது. சில நிபந்தனைகளுடன் பலதார மணத்துக்கும் அனுமதியளித்துள்ளது. இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தக்வா, ஸுஹ்த், கவ்ப், வரஃ போன்ற பல ஆன்மிகப் பண்புகளையும் காட்டித் தந்துள்ளது. எல்லா ஆசைகளையும் அபரிமிதமாக்கி மனித சிந்தனையை திசை திருப்பாமலிருக்க இறை சிந்தனையை வணக்க வழிபாடுகளை வகுத்துத் தந்துள்ளது. 

உணர்ச்சியைத் தூண்டும் இசை, ஆபாசத் திரைப்படங்கள், விரசம் நிறைந்த ஆடல்கள், பாடல்கள் போன்றவை சீர்கேடுகளுக்கான பிரதான காரணிகளாகின்றன. கட்டுப்பாடற்ற ஆண், பெண் தொடர்பாடல்கள், ஒன்றுகூடல்கள் போன்றவையும் வரம்பு மீறிய வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றன. இவை அனைத்தும் எல்லையற்ற இச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. இஸ்லாத்தில்  இத் தீய செயற்பாடுகளுக்கு இடமில்லை. ஆபாச உலகிலும் நெறிபிறழாது வாழ்வாங்கு வாழ்வதற்கான மனோபக்குவத்தை இஸ்லாமிய நெறிமுறைகள் ஏற்படுத்துகின்றன. இதனை ஏற்று நடந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோமாக.
            

இப்படியும் ஒரு நோய்! மலத்தை மடியில் சுமக்கும் குழந்தை- மருததுவக் கட்டுரை



எம்.எஸ்.எம். நுஸைர்,
எப்போதும் எமக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கின்ற போது நாம் அதன் பெறுமதியை பூரணமாக உணர்வதில்லை. ஆனால் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் போது அல்லது முயற்சி செது அப்பொருளை நாம் பெறும் போது அதனை பேணிப் பாதுகாப்பதில் அதிக கரிசனை  எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட நீரை நாம்  வாங்கினால் அதனை மிகவும் கவனமாகவே பாவிப்போம். வீண் விரயம் செய மாட்டோம். ஆனால் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கின்ற உயிர் வாயு ஒட்சிசனைப் பற்றி மிகக் குறைவாகவே சிந்திக்கின்றோம். இந்த ஒட்சிசன் எமக்கு எவ்வாறு கிடைக்கிறது. அதன் பெறுமதி என்ன? அது இல்லாவிட்டால் என்ன நடக்கும்? இதனை எமக்கு இலவசமாகக் கொடுத்தது யார்? போன்றவற்றைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அதேபோன்று தான் எமது உடல் பாகங்கள் சரியாக இயங்குகின்ற நாம் சுகதேகியாக இருக்கின்ற நாட்களில் நாம் எமது உடலைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் எமது உடல் மிகச் சிக்கலான கட்டமைப்பில் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உடற்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்து (இறைவனின் கட்டளைப்படி) மிகச் சரியாக இயங்குகின்றன. பொதுவாக அதிகமான நோகள் மனிதனது முறைகேடான செயற்பாடுகளாலும் தவறான பழக்க வழக்கங்களாலுமே ஏற்படுகின்றன என்பதை யாரும் மறக்க முடியாது.

ஆனால் சிலவேளைகளில் பிறப்பியல் குறைபாடுகள் காரணமாக சிலர் பாரிய நிரந்தர நோகளுக்கு உள்ளாகி விடுகின்றனர். (இது மிக மிகக்  குறைவான எண்ணிக்கையிலேயே ஏற்படுகிறது) என்னைப் பொறுத்த வரையில் மிக அரிதான இந்நோகளை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டிருப்பது, நாம் இறைவனின் அருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வழி முறை என்றே நான் கருதுகிறேன்.

அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் உணவுகள் எவ்வாறு எமக்குப் பயனளிக்கிறது? எமது சமிபாட்டுத் தொகுதியின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி எம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.

சமிபாட்டுத் தொகுதியின் ஒரு சிறு பகுதி பாதிப்படைந்தாலும் கூட நாம் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்பதை எடுத்துக் கூறுவதற்காகவே இச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 க.பொ.த. சாதாரண தரத்தோடு தனது படிப்பினை நிறுத்திக் கொண்ட ஓர் இளைஞன் முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிந்து வந்த போது தனது 22 வயது வயதில் 18 வயதான ஒரு பெண்ணை திருமணம் செகிறான். மிகவும் சந்தோசமாக நகர்ந்த நாட்களினிடையே திருமணத்தின் நான்காவது மாதத்தில் அப்பெண் கர்ப்பம் தரிக்கிறாள். உரிய முறைப்படி மருத்துவ ஆலோசனைகளை பெற்று மிகவும் ஆசையோடும் கவனத்தோடும் கர்ப்பத்தை பேணி வந்த அவள் கர்ப்பத்தின் 10 ஆவது மாதத்தில் சுகப் பிரசவமாக ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 

குழந்தையிலும் தாயிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாததாதல் இருவரும் பிரசவ அறையிலிருந்து விடுதிக்கு மாற்றப்பட்டனர். தா சுகதேகியாகவே காணப்பட்டாள். சிறுவர் நலன் பிரிவு வைத்தியர் பரிசோதித்த பின்னர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மறுநாள் வீடு செல்ல முடியும் எனவும் வைத்தியர் கூறிச் சென்றார்.

10 மாதம் காத்திருந்து பெற்றெடுத்த குழந்தை கையில் கிடைத்த சந்தோசத்தையும் உறவினர்கள் நண்பர்கள், குழந்தையைப் பார்த்துவிட்டு அழகான குழந்தை, அதிர்ஷ்டக்காரி எனக் கூறியதைக் கேட்டு சந்தோசத்தையும் தன் கணவனோடு  பகிர்ந்து கொண்ட அவ் இளம் தா, குழந்தைக்குள் மறைந்திருக்கும் ஆபத்தை அறிந்திருக்கவில்லை.
மறுநாள் காலையில் வைத்தியர் குழந்தையை பரிசோதிக்க வந்தவேளை குழந்தை மலம் சலம்  கழித்ததா? எனக் கேட்டார். குழந்தை பலமுறை சிறுநீர் கழித்ததாகவும் மலம் கழிக்கவில்லை என்றும் தா கூறிய போது குழந்தையின் வயிற்றைப் பரிசோதித்த வைத்தியர் வயிறு வீக்கமடைந்திருப்பதாகவும் இப்போது வீடு செல்ல முடியாது என்றும் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட அத்தா சற்றுக் குழப்பமடைந்ததோடு குழந்தை மலம் கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சில மணி நேரத்தில் குழந்தையின் சுறுசுறுப்பு குறைவடைந்து குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தது. குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தது. வயிறு மேலும் வீக்கமடைந்தது. தா மிகவும் குழப்பமடைந்தாள். வைத்தியர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது. பிற்பகல் வேளையில் குழந்தை பச்சை நிறத்தில் வாந்தி  எடுக்க ஆரம்பித்தது. விசேட சிறுவர் நல வைத்திய நிபுணர் குழந்தையைப் பரிசோதித்தார். குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது Hirschprungs disease  ஆக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும்  மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் கொழும்பு Lady Ridgway வைத்தியசாலைக்கு இடமாற்றம் செயப் போவதாகவும் தாயை தயாராகுமாறும் வைத்தியர்கள் கூறிச் சென்றனர்.

இளம் வயதான அத்தாக்கு என்ன செவதென்றே புரியவில்லை. தலை சுற்றியது. உடல் விறைத்து விட்டது போல்  இருந்தது. உடுத்திருந்த உடையோடு இருந்த சில பொருட்களை சுருட்டி எடுத்துக் கொண்டு குழந்தையோடு தயாரான போது அம்பியூலன்ஸ் வண்டி கொழும்பு நோக்கி பயணமானது. பல கருவிகளோடு குழந்தை இணைக்கப்பட்டிருந்த போதும் குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது. வழி நெடுகிலும் குழந்தை பலமுறை வாந்தியெடுத்தது.

Lady Ridgway வைத்தியசாலையை அடைந்ததும்  அங்கிருந்த வைத்தியர்கள் மிக வேகமாக செயற்பட்டனர்.  குழந்தையை மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திய அவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இச்சத்திர சிகிச்சையின்போது குழந்தையின் பெருங்குடலானது வெட்டப்பட்டு வயிற்றுப் பகுதியில் இணைக்கப்படவுள்ளதாகவும் (Colostomy)  இதனால்  குழந்தையின் மலம் வயிற்றினூடாகவே வெளியேறும் என்றும் மலத்தை சேகரித்து அகற்றுவதற்கு ஒரு பொலித்தீன் பையை வயிற்றுப் பகுதியில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறிய வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு சம்மதமானால் கையொப்பமிடுமாறும் வேண்டிக் கொண்டனர். 

செவதறியாது திகைத்து நின்ற அத்தா அழுது கொண்டே கையொப்பமிட்டாள்.
மிக நீண்ட நேர சத்திர சிகிச்சையின் பின் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டு சில நாட்கள் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பின் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் வலது வயிற்றுப்புற மேற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட துளையினூடாக மலம் வெளியேறியது. குழந்தை படிப்படியாக  முன்னேற்றமடைந்தது. சீராக பாலருந்த ஆரம்பித்தது. அழுகை குறைவடைந்து சுறுசுறுப்பு ஏற்பட்டது. பெற்றோர் சந்தோசமடைந்தனர். 

சில வாரங்களின் பின் இழையவியல் (Histology report)  பரிசோதனை முடிவானது குழந்தைக்கு ஏற்பட்டது Hirschprungs diseaseஎன்பதை உறுதி செதது. Hirschprungs disease ஆனது மிகவும் அரிதான ஓர் நோ. இந்நோ எமது குடலில் காணப்படும்  நரம்பு மண்டலத்தில் ஏற்படும்  குறைபாட்டால் ஏற்படுகிறது.  எமது உணவுக் கால்வாத் தொகுதியானது வாயில் ஆரம்பித்து தொண்டை, களம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் நேர்குடல் எனத் தொடர்ந்து குதத்தில் முடிவடைகிறது. இவற்றில் வா, தொண்டை மற்றும் குதம் ஆகியவை மட்டுமே எமது விருப்பத்தில் இயங்கக் கூடியவையாகும். ஏனைய குடல் பகுதிகளை எமது விருப்பத்தால் கட்டுப்படுத்த முடியாது. அவை எமது மூளையிலிருந்து வரும் தன்னியக்க நரம்புகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.  (Autonomic nervous System) இந் நரம்புகள் மூலம் மூளையிலிருந்து வரும் செதிகளின் அடிப்படையிலேயே குடல் பகுதியில் சுற்றுச் சுருங்கல் அசைவுகள் ஏற்படுத்தப்பட்டு உணவு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு கடத்தப்படுகிறது. அத்தோடு சமிபாட்டிற்குத் தேவையான நொதியங்கள் சுரத்தல், சமிபாடு நடைபெறுதல், சமிபாடடைந்த உணவுக் கூறுகள் இரத்தத்தினுள் அகத்துறிஞ்சப்படுதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் (எமது விருப்பத்திற்கப்பால்)  இத் தன்னாட்சி நரம்புகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. எமது குடல் பகுதியில் நரம்பு மண்டல இரண்டு படைகளால் ஆன வலைப்பின்னலாக அமைந்து  காணப்படுகிறது.

கருவானது குழந்தையாக உருவாகும் போது பெருங்குடலின் இறுதிப்பகுதியில் இந்நரம்பு மண்டலம் (Myenteric Plexuses) தோற்றம் பெறுவதற்கு தவறி விடுவதனாலேயே இந்நோ ஏற்படுகிறது. இதனால் பெருங்குடல் பகுதி சுருங்கி விடுவதற்கு முடியாமல் போவதனால் சமிபாடடையாத உணவுக் கூறுகள்  (மலம்) குடல் பகுதியில் தேக்கமடைகிறது (Mechanic Obstruction). இதனால் வயிறு வீக்கமடைவதோடு கடுமையான வயிற்று வலி ஏற்படும். தேக்கமடையும் மலத்தை குதத்தினூடாக வெளியேற்ற முடியாதது போவதனால் படிப்படியாக தேக்கமடையும் மலம் சிறுகுடல், இரைப்பை என்று எதிர்ப்புறமாக செறிவடைந்து வாந்தியாக வெளியேறும். இவ் இக்கட்டான நிலையில் குடல் புண் ஏற்படுதல், நுண்ணங்கித் தாக்கம், வாந்தி சுவாசப் பைக்குள் செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மரணம் ஏற்படலாம்.
இதனைத் தடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது பெருங்குடல் பகுதியானது வெட்டப்பட்டு வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் துளையூடாக இணைக்கப்படும். இதனூடாக மலம் வெளியேறும். இதனை ஒரு பையிலே (Colostomy bag) சேகரித்து மலத்தை அகற்றி விட்டு மீண்டும் அப்பையை இணைத்துக் கொள்ள முடியும். இது மிகவும் சிரமமான  காரியமாக  இருந்த போதிலும் இது நிரந்தரமானது அல்ல. குழந்தை வளர்ந்ததும் குறிப்பிட்ட ஓர் வயதை நிறையை அடைந்ததும்  மீண்டும் ஓர் பாரிய சத்திர சிகிச்சை செயப்படும். இதன் போது நரம்பு மண்டலம் அற்ற பெருங்குடல் பகுதி முற்றாக  அகற்றப்பட்டு ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த முனையானது குதத்தோடு இணைக்கப்படும். இதனால் இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் (ஏனையவர்களைப் போன்று) குதத்தினூடாக மலம் கழிக்க முடியும். ஆனால் பெருங்குடல் அகற்றப்பட்டதனால் நீரை  அகத்துறிஞ்ச  முடியாமல் வாழ்நாள் முழுவதும் திரவமாகவே  மலம் கழிக்கப்படும். (சுகதேகி ஒருவரில் பெருங்குடலின் தொழிற்பாடு காரணமாக நீர் அகத்துறிஞ்சப்படுவதனாலேயே  நாம் திண்மமாக மலம் கழிக்கின்றோம். வயிற்றுப் போக்கு ஏற்படும் போது (Diarrhoea) நுண்ணங்கி தற்காலிகமாக பெருங்குடலின் தொழிற்பாடுகளை பாதிப்பதால் திரவமாக மலம் கழிக்கப்படுகிறது)
இவ்வாறு எமது உடலில் உள்ள ஒரு சிறிய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு விட்டால் இவ்வளவு பாரிய பிரச்சினைகளை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றால் எம் உடல் முழுவதும் சீராக இயங்குவதற்கு காரணமான இறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதனை சிந்திக்கத் தவறமாட்டீர்கள் என நம்புகிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் ஆட்சியமைத்து விடும் என்று அரசுக்கு அச்சம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெரும் பீதியில் உள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியமைத்து விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குச்சவெளி, குறிஞ்சாங்கேணி, முகம்மதியா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம்  மேற்கண்டவாறு கூறினார். 

தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், 
முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலம் பொருந்திய கட்சிகள் என்பதனை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப் போகிறது. இதன் மூலம் சர்வதேசத்தின் அனுசரணையுடன் எமது நீண்டகால அபிலாஷைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான சூழல் உருவாகலாம். 

எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னொரு சின்னத்தில் ஏறி சவாரி செயும் நிலை ஏற்படாது. எமது கட்சியின் ஆதரவின்றி யாரும் தனித்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைக்க முடியாது. பேரம் பேசும் விடயத்தில் எமது பலத்தைக் காட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார். 

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை - சம்பந்தன் எம்.பி.



வடக்கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருகின்ற போது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணிக்கமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மருதமுனையில் தெரிவித்தார்.
 மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகின்றோம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த இரண்டு சமூகங்களையும் பிரித்து வைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
ஆகவே முஸ்லிம் - தமிழ் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு  இதை முறியடிக்க  வேண்டும். இல்லையேல் நாங்கள் பலவிதமான இழப்புக்களை சந்திக்கநேரிடும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நாட்டிலே சிங்கள சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மதித்தும் வருகின்றோம். எமது உரிமைகளைப்பற்றி நாங்கள் பேசுகின்ற பொழுது அவர்களுக்கெதிராக செயற்படவில்லை.
தமிழ் - முஸ்லிம் மக்கள் சமவுரிமைகளுடன் கௌரவமாக வாழ வேண்டும். எமது சமய கலாசார விடயங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எமது தனித்துவம் பேணப்பட வேண்டும்.

தந்தை செல்வநாயகம் அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த போது தமிழ் மக்களுக்காக மாத்திரம் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்காகவே ஆரம்பித்தார். இதை அவர் மிகவும் தெளிவாக உறுதிப்படக் கூறியிருக்கிறார்.

ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு தமிழர்களால் எந்தவிதமான அசம்பாவிதமும், யாராலும் நடந்ததாக சோல்ல முடியாது. அப்போது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் - முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம்,  மன்னார் மற்றும் கிழக்கில் பல இடங்களிலும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இப்போது யுத்தம் முடிந்து விட்டது. தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இன ரீதியான பிரச்சினைகள் இப்போது இல்லை. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மோத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பொதுப்பிரச்சினைகளாகும். அவற்றை நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

 ஆகவே தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. ஒற்றுமையும் ஒருமித்த குரலும் இருந்தால்தான் எமது உரிமைகளைவென்றெடுக்க முடியும் என்றார்.

திருட்டுத் திருமணங்கள்....


முஸ்லிம்களின்  நடத்தைகளே  இன்றைய இன  விரிசல்களுக்கும்  பொறாமைக்கும்  பிரதான காரணியாக  அமைந்துள்ளது எனலாம். 
‘காதிக்கோடு’  வழக்குகளின் மூலம்  கசப்பான அனுபவங்களையே  பெறமுடிகின்றன.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரியின்  மன அழுத்தத்தை வாசிக்கும் போது,‘நாங்கள் ஈமான் கொண்ட முஸ்லிம்களா?’  என்ற சந்தேகம் எழுகின்றது.
‘நாங்களே, தொழவில்லை, வேறு மதத்திலிருந்து வந்த நீ தொழத்தேவையில்லை என்று இஸ்லாத்தின் ஆணிவேரையே அசைக்கும்  போக்கைச் ஜீரனிக்க முடியவில்லை. 
அந்நிய மதத்தவர்கள் கூட தொழுபவர்களைக் கண்ணியப்படுத்தும்போது, முஸ்லிமானவர்கள் கேவலமாகத் தொழுகையை விமர்சிக்கலாமா? 
வருமான வசதியில்லாத நிலையில் இருக்கும் போது, அவளின் வருமானத்தில் குடும்பம் நடத்த முடியுமானால், அவளது உணர்வுகளுக்கு ஏன் இடமளிக்கக் கூடாது. இது முனாபிக்தனமான போக்கல்லவா? நன்றி கெட்டச்செயலல்லவா?
மகன், வெளிநாட்டுப்பணம் அனுப்புவதால், ஏற்பட்ட அகங்காரம் இன, மத உறவுகளை விட்டுவந்தவளை விலக்கிவிட்டு வேறு ஒரு திருமணம் செவிக்க நினைப்பது துரோகம் இல்லையா.
மாற்று மதப்பெற்றோர் இதை ஒரு பிரச்சினையாக்கி இனமோதல்களுக்கு இட்டுச் செல்லலாமல்லவா? இதனால், முஸ்லிம் சமூகமே தலை குனியவேண்டிய  நிலை ஏற்படாதா?
தம்புள்ள முதல் தெதுரு ஓயா வரை  மேற்கொள்ளப்பட்டு வரும் இன முறுகல்களுக்குப் பின்னணியான காரணிகள் எமது நடத்தையாகவே இருப்பதை  மறந்துவிடக்கூடாது.!
இன்று, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல வழிகளிலும் பலவீனப்பட்டு பழிவாங்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு மேற்குலகம் தூபமிடுவதையும் காணுகின்றோம். 
பிரான்ஸ், மியன்மார் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு முடிவு காண முடியாத  நிலையில் இருக்கும் நாம், இதுபோன்ற  மாற்றுமத விரிசல்களை ஏற்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமானதா என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
எம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்ளும்  காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கே  செயும் கண்ணியமென்பதை இருபாலாரும் மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.
திருட்டுத் திருமணங்களுக்குத் துணைபோகும் திருமணப் பதிவாளர்கள் - மௌலவிமார்கள் கேவலம் பணத்திற்காக இஸ்லாத்தை விலைகூறும் போக்கு, வெறுக்கத்தக்க இழிசெயலாகும்.
பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு பெண்ணுக்கு இரண்டு திருமணங்களைச் செது வைத்த பதிவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?           
                        -சாரணா கையூம்

கிழக்கில் விஷம் கக்கும் முஸ்லிம் தலைமைகள்


கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பத்திரிகைகளில் வெளியாகும் தேர்தல் மேடைப் பேச்சுக்களை வாசிக்கும் போதும் அரசியல் பேட்டிகளை அவதானிக்கும் போதும் ஒருவரையொருவர் வெட்டி  வீழ்த்தும் பாணியில் சூடு பறக்கும் தொனியில் முஸ்லிம் தலைமைகள் ஒருவரையொருவர் விமர்ச்சிக்கின்ற போக்கை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு  சமூக எழுச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் அரசின் துணையோடு செயலாற்ற வேண்டிய இவர்களால்  இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என்ற சந்தேகக் கேள்விகளை இன்று எமது சமூகம் எழுப்பிய வண்ணம் இருக்கின்றது.
கருகும்  மியன்மாரின் அவல நிலை கண்டு இலங்கை முஸ்லிம்கள் அவர்களின் எதிர்கால இருப்புக்கு உத்தரவாதம் கிடைக்குமா எனச் சிந்திக்க தலைப்பட்டு விட்டனர். அச்ச உணர்வோடு வாழ்கின்றனர். தம்புள்ளை, குருநாகல் என ஆரம்பித்து கிண்ணியா வரவேற்புக் கோபுரம் எனச் சென்று ராஜகிரிய, தெகிவளை என வியாபித்து முஸ்லிம்களுக்கெதிராக எச்சரிக்கைகள் மிரட்டல் மூலம் பயம் காட்டி எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு சவால் விடுக்கும் செயற்பாடுகள் நிறைந்து காணப்படும்  இன்றைய சூழலில் எமது தலைமைகள் பிரிந்து நின்று அரசியலில் ஈடுபட்டால் எமது சமூகம் உருப்படுமா? என மூக்கில் விரலை வைக்க வேண்டியுள்ளது. எங்களை நாங்களே சுய விசாரணை செது கொள்வது நல்லது. இவை அனைத்தும் பத்திரிகைச் செதிகளைப் படிக்கும் போது எழும் உணர்வலைகள் எனலாம்.
முஸ்லிம் சமூகத்தின் தேவைகளோ அனந்தம்.  வீடில்லா பிரச்சினை தொழிலில்லா பிரச்சினை, கல்விப் பிரச்சினை, வர்த்தகத்தில் திட்டமிட்ட சதிகள் என எமது அவல நிலை தொடர்கின்றது. இவைகளுக்கு விடை காண  ஏதாவது திட்டங்கள் இவர்களிடம் இருக்கின்றதா? தீர்க்க வேண்டும் என்ற ஆவலாவது இவர்களிடம் இருக்கின்றதா? தலைமைகள் பிரிந்து விட்டால் நிச்சயமாக பொது மக்களின் ஆசை அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் பின் தள்ளப்படுவதுண்டு இதில் மாற்றுக் கருத்துக்கிடையாது.
முஸ்லிம்களின்  கல்வியைப் பாருங்கள் நாடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாலும் தரமான ஒரு முஸ்லிம் பாடசாலையைக் கண்டு கொள்ள முடியுமா? முஸ்லிம்களுக்கு கை கொடுக்க யார் முன் வருவார்கள்? எமது குறைகளை யாரிடம் சோல்லி முறையிடுவது? முஸ்லிம்களின் தேவைகளை எமது தலைமைகள்  கண்டு கொள்வதில்லை. இவர்களுக்கிடையே தலைமைத்துவப் போட்டி கழுத்தறுப்புக்கள் தொடர்கின்றன. புனித ரமழானில் கிழக்கில் நடந்தேறியதென்ன? யாராவது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கிழக்கில் சில முஸ்லிம் நகர்கள் அரசியல் காரணமாக அல்லோல கல்லோலப்பட்டன. பத்திரிகைகளில் படத்தோடு பார்க்க முடிந்தது. ரமழானின்  புனிதம் எங்கே போனது? அக்கரைப்பற்றில் நடந்தவை எம்மை தலைகுனிய வைக்கின்றது. கிழக்கில் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தும் அரசியல் மேடைப் பேச்சுக்கள் ஏனைய சமூகங்கள் சந்தோஷப்படும் வண்ணம் முஸ்லிம் தலைமைகள் பிரிந்து விட்டமை கவலையளிக்கின்றது. கிழக்கில் மட்டுமல்ல வெளியிலும் தலைமைக்குப் போட்டி நிலவுகின்றது. ஹஜ் கமிட்டியைப் பாருங்கள் நீதி கேட்டு படி ஏறி விட்டார்கள்.

சாந்தியையும் சமாதானத்தையும் உலகிற்கு வாரிவழங்கும் மார்க்கம் இஸ்லாம் என்கிறோம். அதனை மார்க்கமாக ஏற்று முஸ்லிமாக வாழ்ந்து வரும் எமக்கு ஒரு தலைமை இருக்கின்றதா? தலைமைக்குப் போட்டி? விட்டுக் கொடுப்போடு செயற்பட்டு ஒரு தலைமையின் கீழ் சமூகத்துக்கு வழிகாட்ட இவர்களால் முடியவில்லை. ஏன்? அரசியல் தொழிலாகிவிட்டதன்  காரணமாக நேர்மையாக நடப்பது சாத்தியமில்லை என்ற மெரில்டனின் கருத்தே நினைவுக்கு வருகின்றது. ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லையா? இரண்டு வருடங்களில் மக்காவை வெற்றி கொள்ளவில்லையா? முஸ்லிம் தலைமைகளே சிந்தித்து பாருங்கள் இப்படியே சென்றால் எமது எதிர்கால இருப்புக்கு உத்தரவாதம் இல்லாது போ விடும்.
கருகும் மியன்மாரும் காத்திருக்கும் இலங்கையும் என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கருத்தை சஞ்சிகையொன்றில் வாசித்தமை நினைவுக்கு வருகின்றது. அதில் பட்டியல் இடப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்புச் செதிகள் கவலையளிக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஓர் பாரிய அழிவின் ஒரு சில தீப்பொறிகள் என அவைகளைக் கருதலாம் கைகள் எழுத மறுக்கின்றன விழிகள் குளமாகின்றன.

முஸ்லிம் தலைமைகளே! அல்லாஹ்வுக்காக ஒன்றுபடுங்கள் சமூக நலனுக்காக செயல்படுங்கள் அரசியலை வியாபாரமாக்கி விடாதீர்கள் கொட்டும் விஷத்தை நிறுத்தி விட்டு பகைமையை மறந்து சமூகத்தை எண்ணிப் பாருங்கள். நாளுக்கு நாள் அநாதரவாகிக் கொண்டிருக்கும் உரிமைகளோடு வாழத் துடிக்கும் உங்கள் சமூகத்தின்  அவலநிலையை எண்ணிப் பாருங்கள். நிதானத்தோடு பொறுப்பாகச் செயற்படுங்கள் மறுமை அதன் அறுவடை நிலமாக அமையட்டும்.
-திக்குவல்லை இனாயாஹ்

முக்கிய திருப்புமுனையில் கிழக்கு!

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம்  (08.09.2012) நடைபெற இருக்கின்றது. இத் தேர்தலின் முடிவு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெறப் போகின்றது. இலங்கையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டுமென்று ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் பலவும் கோரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற அதே வேளை, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களையும் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்னணியில் இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியாமலும், ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் அழுத்தங்களை தட்டிக் கழிக்க முடியாமலும் இருக்கின்றது. மேலும், பெரும்பான்மைச் சமூகத்தினரையும் அரசாங்கத்தில் உள்ள பௌத்த கடும் போக்காளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு திரிசங்கு நிலையில் இருந்து கொண்டிருக்கும் அரசாங்கம், இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தை விடவும் முன் கூட்டியே அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற கனவில்தான் அரசாங்கம் தேர்தலை அறிவித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் உள்ள மு.காவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி நிச்சயம் என்ற நிலை இருந்த போதிலும், மு.கா தனித்துப் போட்டியிடுவதற்கு முடிவு செததனால் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி போட்டித் தன்மையுடையதாக மாறியுள்ளது. புலனாய்வுத் துறையினரின் தகவல்களுக்கமைய கிழக்கு தேர்தலில் அரசாங்கம் மூன்றாவது இடத்திலேயே வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

தற்போது கிழக்கு மாகாண சபையின் தேர்தல் மும்முனைப் போட்டியாகவே உள்ளன. ஐ.ம.சு.விற்கும், மு.காவிற்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையேதான் இந்தப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.தே.கவின் செல்வாக்கு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் ஒன்றாக இருப்பதற்கான தோற்றப்பாடு காணப்படாத போதிலும், அக்கட்சிக்கான செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற வேண்டுமாயின் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியமாகும். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ். முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் ஐ.ம.சு.வின் வெற்றியை உறுதி செதது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய சிறுபான்மையின கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் காரணமாகத்தான் ஐ.ம.சு.மு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றியது.

ஐ.ம.சு.முன்னணி 2008 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட சிறுபான்மையினரின் வாக்குகளைப் போன்று இம்முறையும் பெற்றுக் கொள்ள முடியாது. அன்றைய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டிருக்கவில்லை. இதனால். தமிழ் மக்களின் வாக்குகளை ஐ.ம.சு.முவினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடுவதனால் தமிழ் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் என்பதனை ஒரு மிகையான கூற்றாக கருத முடியாது. ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பே அதிகமான தமிழர் பிரதேச உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூடுதலான தமிழ் பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
என்ற போதிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் நிலவுகின்ற போதிலும் அது முடியாத காரியமாகும்.
அதே போன்று, ஐ.ம.சு.முன்னணியாயினும், மு.காவாயினும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சி என்பது மு.காவின் தயவில்தான் அமையும் என்பதே அரசியல் அவதானிகளின் ஏகோபித்த கருத்தாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களின் வாக்குகள் ஐ.ம.சு.முவிற்கும், ஐ.தே.கவுக்கும் இரண்டாகப் பிரிந்து செல்கின்றன. தமிழர்களின் வாக்குகள் பெரும்பான்மையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குச் செல்லும் என்று எதிர் பார்க்கின்ற அதே வேளை, முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.க.வுக்கும், ஐ.ம.சு.மு.வுக்கும், மு.காவிற்கும் சுயேட்சைக்குழுக்களுக்கும் என நான்கு கூறாகப் பிரிவதற்கான வாப்புக்கள் காணப்படுகின்றன. ஆயினும், மு.காவிற்குத்தான் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமென்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் ஐ.ம.சு.முக்கும், முகாவிற்கும், த.தே.கூவிற்கும் இடையேதான் பலத்த போட்டிகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வாக்குகள் எல்லாக் கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுமாயின் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என்ற ஆபத்து இருக்கின்றது. மு.காவும், த.தே.கூ.வும் தலா மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தை அவதானிக்கும் போது அங்கு, த.தே.கூ அதிகப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும். இக்கட்சிதான் மாவட்ட வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய இரு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா. பின்தங்கியே நிற்கிறது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஐ.ம.சு.முவுக்கும், மு.காவிற்கும் இடையேதான் பலத்த போட்டிகள் நிலவுகின்றன. முஸ்லிம் பிரதேசங்களில் மு.காவிற்குத்தான் செல்வாக்கு அதிகம் உள்ளது. பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரங்களின் போது அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளன. இதனால், கடந்த 2008ஆம் ஆண்டை விடவும் இத்தேர்தலில் மு.காவிற்கு கணிசமான வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கருதப்படுகின்றது. 
என்றபோதிலும், மு.கா அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளுமா என்பதை முஸ்லிம் மக்கள் ஐ.மு.சு.முவுக்கு அளிக்கப்போகும் வாக்குகளே தீர்மானிப்பதாக இருக்கும். முஸ்லிம்களின் 30 ஆயிரம் வாக்குகள் ஐ.ம.சு.முன்னணிக்கு அளிக்கப்படுமாயின் ஐ.ம.சு.மு.தான் வெற்றி பெறும். மு.கா வெற்றி பெற வேண்டுமாக இருந்தால், ஐ.ம.சு.முன்னணிக்கு அளிக்கப்படும் முஸ்லிம்களின் வாக்குகள் சுமார் 25 ஆயிரத்தை விடவும் குறைவாக இருக்க வேண்டும். அத்தோடு சுமார் 80 ஆயிரம் வாக்குகளை மு.கா பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள், அக்கட்சியில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களை விடவும் கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், அப்பட்டியலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் ஏழு பேரில் ஒருவரை தவிர்த்துவிட்டு ஆறு பேரை வெற்றி பெறச் செயும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அம்பாறைத் தொகுதியை இரண்டு வலயங்களாகப் பிரித்து தலா மூன்று வேட்பாளர்களை வாக்காளர்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளார்கள். ஐ.ம.சு.மு சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தலா 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஆதலால், ஐ.ம.சு.முவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. 

இத்தேர்தல் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கை எடை போட்டுக் கொள்வதற்கான ஒரு தேர்தலாகவும் இருக்கின்றது. தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்றைய அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள். இதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், மீண்டும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் அக்கட்சிகள் தமது செல்வாக்கை நிரூபிக்கத் தவறும் போது அரசாங்கம் மு.கா.விற்கு அதிக அந்தஸ்தை வழங்கும் என்ற ஒரு அரசியல் நகர்வும் தேர்தலின் பின்னர் இருக்கினறது.
ஐ.ம.சு.மு தனித்து ஆட்சி அமைக்கும் நிலை இல்லாத வகையில் தேர்தல் களம் அமைந்து காணப்படுவதனால், மு.காவின் ஆதரவோடுதான் ஆட்சியை அமைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

மு.கா அரசாங்கத்தோடு இணைந்து ஆட்சி அமைத்துக் கொள்வதற்கு மறுதலிக்குமாயின் அல்லது உயர்ந்தபட்ச பேரத்தினை பேசுமாயின் அரசாங்கம் மு.காவில் உள்ள ஒரு சில உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற ஒரு அபிப்பிராயமும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த அச்சத்தினால்தான் தமது கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரிடம் ஆளுந் தரப்பினர் இப்போதே பேச்சுக்களில் ஈடுபட்டு தயார் நிலையில் வைத்தி இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்து வருகிறார். அவர்கள் யாரென்று தலைமைக்கு தெரியாமலும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டுதான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மு.காவின் வேட்பாளர்களிடம் ‘பைஅத்’ செது கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டுச் செயற்படுவோமென்ற சத்தியத்தைப் உலமாக்கள் மூலமாக ரவூப் ஹக்கிம் பெற்றுள்ளார்.

தேர்தலின் பின்னர் மு.கா அரசாங்கத்துடன்தான் இணைந்து கொள்ளும் என்று பரவலாக நம்பப்படுகின்ற போதிலும், தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பயன்டுத்தி அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலையினை அதிகரித்துக் கொள்வதற்கே ரவூப் ஹக்கீம் எண்ணம் கொண்டுள்ளார். இதற்கு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் வழக்கம் போல் பதவிகளுக்காக ஓடி விடக் கூடாதென்பது அவசியமாகும். இதற்காகவே ரவூப் ஹக்கீம் பைஅத் எனும் வழிமுறையை கையாண்டுள்ளார்.

இதேவேளை இத்தேர்தல் இனரீதியான தேர்தலாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது வெற்றியை தமிழர்களின் வெற்றியாகவும், மு.கா தமது வெற்றியை முஸ்லிம்களின் வெற்றியாகவும் காட்டுவதற்கு பிரச்சாரம் செது கொண்டிருக்கின்றன. 
இதேவேளை, கிழக்கில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. வன்முறைகளில் ஈடுபடாதிருப்பதே சிறந்ததாகும். தேர்தல் முடிந்ததும் அரசியல்வாதிகள் உறவாடிக் கொள்வார்கள். அரசியலில் நிரந்தர பகையில்லை என்று கருத்துக்களை முன் வைப்பார்கள். யாருக்காக சண்டை பிடித்துக் கொண்டோமோ அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். இதனை வாக்காளர்கள் உணர்ந்து செயற்படல் வேண்டும்.

மேலும், எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் சமூகத்திற்கு நன்மை கிட்டும் என்பதனை தீர்மானித்தல் செதல் வேண்டும். அத்தோடு, யாரை வெற்றி பெறச் செய வேண்டும் என்பதும் முக்கியமாகும். பணம் தந்தார், பொருள் தந்தார், பார்சல் தந்தார், உறவுக்காரர், தமக்கு விருப்பமான கட்சி என்று எதனையும் கருத்தில் கொள்ளாது நல்ல வேட்பாளரை வெற்றி பெறச் செய வேண்டும். 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவினைப் பயன்படுத்தி தமது ஏகாதிபத்தியத்தை இலங்கையில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு அதிரடி நடவடிக்கையே மு.கா தனித்துப் போட்டியிடுவதற்கு முக்கிய காரணமாகும். ஐ.ம.சு.மு வெற்றி பெற்றால் மக்கள் அரசாங்கத்தோடுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சினைகளில்லை. புலி ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகிவிடும்.
அரசாங்கம் தனித்து ஆட்சியை அமைத்துக் கொள்ளாத போது அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தத் தொடங்கும். ஆதலால் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதொன்றாக விளங்குகிறது.

வாக்காளர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தல் வேண்டும். எவரும் வாக்களிக்காதிருக்கக் கூடாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்த்தக் கூடியதொரு தேர்தலாக இருப்பதனால், வாக்களிப்புத்தான் அத் தீர்வினைப் பெற்றுத் தரும் ஆயுதமாக இருக்கப் போகின்றது. இலங்கை அரசாங்கம் தேர்தலின் பின்னர் தீர்வினை முன்வைப்பதற்கு மறுதலிப்பதற்கு முனையுமாயின் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலைச் செது கொள்ளும் நிலையையும் தோற்றுவிக்கலாம். அவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன ரீதியானதாகவே இருக்கும். பௌத்த தேசியவாதத்தையும், சிங்கள பெரும்பான்மையினரின் தேசிய வாதத்தையும் வலியுறுத்தி தேசிய இயக்கம், ஹெல உறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலையும் உருவாகும். 

ஆகவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருப்பு முனையாகவே அமைய இருக்கின்றதென்பது கவனத்திற்குரியதாகும்.
வாக்காளர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தல் வேண்டும். எவரும் வாக்களிக்காது இருக்கக் கூடாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்த்தக் கூடியதொரு தேர்தலாக இருப்பதனால், வாக்களிப்புத்தான் அத்தீர்வினை பெற்றுத் தரும் ஆயுதமாக இருக்கப் போகின்றது.

கிழக்கு மாகாண சபை தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் உதிர்த்தவை...


முஸ்லிம் பள்ளிவாசல்களை நாம் எப்போதும் பாதுகாப்போம். இது சத்தியம். இனவாதம் மதவாதம் பேசி சிலர் வாக்குக் கேட்க முயற்சிக்கின்றனர். அதைச் செய்ய வேண்டாம் என எல்லா அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.  இன ரீதியான குறுகிய அரசியல் நோக்கங்கள் இனியும் வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கை கட்டியெழுப்புவோம். 
                    -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


அரசாங்கம் முஸ்லிம்களுடைய மத உரிமைகளை இல்லாதொழிக்கின்றபோது அரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து அமைதியாகவே இருக்கிறது. அவர்கள் மேடைகளில் பேசுவதால் மட்டும் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது.  அரசின் பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரவுமில்லை. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுமில்லை.  

- ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்


முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக வெளிநாட்டு இராஜதந்திர பதவிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளை தனிநபர்களின் நலன்களுக்காக கோரிவருகிறது. பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தையே விமர்சிப்பதற்கு அக்கட்சிக்கு எந்தவித யோக்கியதையும் கிடையாது.

- சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 

தேர்தலில் வியூகம் வகுக்கத் தெரியாத முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிகள் உடைக்கப்பட வேண்டும் என கனவு காண்கிறது. சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய தேவையுள்ளது. ஒரு சில குழுக்கள் பள்ளி உடைப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதற்கு அரசு பொறுப்பல்ல. முஸ்லிம்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஜனாதிபதி இனக்குரோதத்தை ஏற்படுத்த முனைவாரா?
-அமைச்சர் அதாவுல்லாஹ், தலைவர், தேசிய காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எமது கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும் எம்மைவிடுத்து வேறு யாருடனும் எந்த மாகாண சபையிலும் கூட்டணி ஏற்படுத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. எமது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் கடந்த தேர்தல்களில் அவர்கள் எம்முடன் இணைந்திருந்தவர்கள் அல்லர். எனினும் ஏனைய இரு மாகாண சபைகளை விடவும் கிழக்கு மாகாண சபையில் நாம் சற்று பின்னடைவிலேயே இருக்கிறோம்.

-பஷில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்


தமிழ் தேசிய அரசியல் இதுவரை காலமும் எந்தப் பதவிகளுக்கும் சோரம்போகாது தனது மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலில் பதவிகள் இல்லாமல் கட்சியை நடத்த முடியாத அவல நிலையில் உள்ளது. இந் நிலை மாற்றப்பட வேண்டும்.
  
- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்


 முஸ்லிம் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெறும்பட்சத்தில் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. அதேபோன்று த.தே.கூட்டமைப்பு தனிப் பெரும் கட்சியாக வெற்றியீட்டினால் நாம் ஆட்சியமைப்பதற்கு மு.கா. உதவ முன்வர வேண்டும். 
  
- இரா.சம்பந்தன் எம்.பி., தலைவர், த.தே.கூட்டமைப்பு

பள்ளிவாசல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் வீறாப்போடு பேசும் ஹக்கீம் இந்த நாட்டின் உயர்சபையான பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்த சந்தர்ப்பத்திலும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டார். இவர் என்ன முகத்துடன் இங்கு வந்து வீராப்புப் பேசுகிறார். இவ்வாறு சமூகத்தைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் பேசாது சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதற்காகவா மறைந்த தலைவர் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்?  
அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,  தலைவர், அ.இ.மு.கா.

பசித்த பிராணிகளும் உணவுத்தட்டும்


-மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி) 
 எம்.ஏ (லண்டன்)

 வெறி கொண்ட பிராணிகள் உணவுப் பாத்திரங்களை நோக்கி வேகமாகப் பாவதைப் போல மற்ற சமூகத்தவர் ஒரு காலத்தில் முஸ்லிம்களை நோக்கிப் பாய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எதிர்வு கூறினார்கள். அந்த நிலைமையை இன்று பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. 

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் உம்மத் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை, அகதி வாழ்க்கை, கொலை, கொள்ளை, அழிவு, கற்பழிப்பு, வறுமை, அறியாமை என முஸ்லிம் சமூகத்தின் துன்ப துயரங்களின் பட்டியல் நீளுகின்றது. 

சர்வதேச ரீதியில் பலஸ்தீன், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், செச்னியா, சிரியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் அழுகுரல்கள் எமது காதுகளை வந்தடைந்த வண்ணமுள்ளன. அவற்றையெல்லாம் மிஞ்சி விடும் வகையில் மியன்மார் (பர்மிய) முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் அழிவு நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களை பலாத்காரமாக மத மாற்றுதல் உலகம் எங்கும் இல்லாத வகையில் மியன்மாருக்கே உரிய பாதகச் செயலாக விளங்குகின்றது. 

சீன முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இரும்புத் திரைக்குப் பின்னால் அம் முஸ்லிம்களின் மத உரிமைகளும் மனித உரிமைகளும் பலாத்காரமாக மீறப்படுகின்றன. அம்மக்கள் மீதான நீண்ட கால அடக்கு முறைகள் தற்போதுதான் மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரிய வருகின்றன. 

அண்டை நாடான இந்தியாவில் இந்துத் தீவிரவாதிகளின் கை எப்போதுமே ஓங்கி இருக்கும். முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு அங்கு குறைவே இருக்காது. பெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம்கள் கையாலாகாதவர்களாகவும் அறியாமை, வறுமை என்பவற்றால் பீடிக்கப்பட்டவர்களாகவுமே வாழுகின்றார்கள். இந்தியா மிகவும் பரந்த, விசாலமான நாடு என்பதால் முஸ்லிம்களுக்கு நடைபெறுகின்ற அநியாங்களை வெளியுலகு கண்டு கொள்வதில்லை. 

அடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வருவதையறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சியடையவும் வேண்டும். அதேவேளை இஸ்லாத்துக்கெதிரான தீய பிரசாரங்களும் முஸ்லிம்கள் மீதான துவேஷமும் (கீச்ஞிடிண்ட்) முஸ்லிம்களுக்கெதிரான தேசியவாதமும் (‡ச்ணாடிணிணச்டூடிண்ட்) வளர்க்கப்படும் இடங்களாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. இந்நாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைக்கு ஸியோனிஸமும் தீவிர வலதுசாரிக் கிறிஸ்தவமும் காரணிகளாக விளங்குகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய நெறி முறைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் கணிசமான அளவு இருப்பதைப் போலவே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட வழியிலும் குற்றச் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபடும் முஸ்லிம்களும் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களின் பெயர்களையும் இனத்தையும் வைத்தே மேலைத்தேய நாடுகள் முஸ்லிம்களை கணிக்கின்றன. இஸ்லாத்தின் மீது மேலை நாட்டவர் வெறுப்படைய இவர்களின் நடவடிக்கைகள் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் இந்தியா, பர்மா, சீனா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் வெளிப்படையான வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்வதில்லை. 

ஆனால் பொறுப்பற்ற முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகி இரண்டாந்தரப் பிரஜைகளாக மேல் நாட்டு சமூகத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். அம் முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை சீர்த்திருத்திக் கொள்வார்களானால் இஸ்லாம் மேலும் வேகமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை. இது மேல்நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா நாட்டுக்குமே பொருந்தும். 

அடுத்து ஆபிரிக்கக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் இதனை முஸ்லிம் கண்டம் என வர்ணிக்கும் அளவுக்கு அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகின்றது. மொத்த ஆபிரிக்காவின் 1051 மில்லியன் மக்களில் முஸ்லிம்கள் 554.32 மில்லியனாகவும் சுதேச நம்பிக்கையைப் பின்பற்றுவோர் 100 மில்லியனாகவும் கிறிஸ்தவர்கள் 304 மில்லியனாகவும் உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் பல ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. உள்நாட்டுப் போர்,  கல்வி அறிவின்மை, இன கோத்திர முறுகல் என்பவை முஸ்லிம்களை பின்தங்கிய சமூகமாகவும் கிறிஸ்தவ உலகின் உணவுத்தட்டை போலவும் வாழ வைத்துள்ளது.

சர்வதேச ரீதியில் எமது சகோதர முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற துன்ப துயரங்களையும் அவலங்களையும் விரிவாக ஆராவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவற்றை மேலோட்டமாக தொட்டுக்காட்டிய பின்னர் நம் நாட்டில் நாம் படும் அவஸ்தைகளையும் நாளாந்தம் நாம் எதிர்நோக்கும் சவால்களையும் சற்று விரிவாக நோக்குவதே எமது நோக்கமாகும். 

இலங்கையைப் பொறுத்தவரையில் எமது நீண்ட கால வரலாற்றில் ஏனைய சமூகங்களுடனான உறவு பெரும்பாலும் சுமுகமாகக் காணப்பட்டு வந்துள்ளது. எழுபதுகளின் இறுதிப்பகுதியில் புலிகளின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் முன்னர் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர பெரிய அளவில் முஸ்லிம்களின் இருப்புக்கோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சோந்த மண்ணிலிருந்து  அவர்கள் வெளியேற்றப்படவில்லை. 

எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த போது இலக்கையும் இலட்சியத்தையும் மறந்து தமது துப்பாக்கிகளை நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பக்கம் நீட்டினார்கள். பசித்த பிராணிகள் உணவுத் தட்டை நோக்கிப் பாவதைப் போல அப்பாவி முஸ்லிம்கள் மீது பாந்து வெறியாட்டம் ஆடினார்கள். அக்காலப்பகுதியில் வட கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கஷ்ட நஷ்டங்கள் உயிர் உடமை இழப்புக்கள் எண்ணிடலங்காதவை. எதற்கும் ஒரு முடிவு இருப்பதைப்போல் புலிகளின் திசைமாறிய போராட்டத்துக்கும் ஒரு முடிவு வந்தது. 

எகிப்து தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு பச்சைக்கொடி

எகிப்து அரச தொலைக்காட்சிகளில் தலையை முழுமையாக மறைக்கும் ஹிஜாபுக்கு இருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த தடையானது நீக்கப்படுவதை உறுதி செயும் விதமாக ஹிஜாப் அணிந்த நிலையில் பாத்திமா நாபில் என்பவர் முதன் முதலாக அந்நாட்டு அரச செதித் தொலைக்காட்சியான செனல் - 1 இல் செதி வாசிப்பது ஒளிபரப்பப்பட்டது. 

ஹுஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் எகிப்தில் இஸ்லாம் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட்டு வரும் நிலையிலேயே மேற்படி மாற்றமும் நிகழ்ந்துள்ளது. 
முன்னதாக கடந்த ரமழான் மாதம் பெண்கள் மட்டும் கடமையாற்றும் இஸ்லாமிய தனியார் தொலைக்காட்சியொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டமையும் அது அங்கு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

2002ஆம் ஆண்டு சப்வாத் அல் ஷரீப் ஊடக அமைச்சராக இருந்த போது அரச தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில் ஹிஜாப் அணிந்து செதி வாசித்து புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்த பாத்திமா நாபில் அரபு வசந்தம் தற்போது தொலைக்காட்சியையும் வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Blogroll