சனி, 22 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் உதிர்த்தவை...


முஸ்லிம் பள்ளிவாசல்களை நாம் எப்போதும் பாதுகாப்போம். இது சத்தியம். இனவாதம் மதவாதம் பேசி சிலர் வாக்குக் கேட்க முயற்சிக்கின்றனர். அதைச் செய்ய வேண்டாம் என எல்லா அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.  இன ரீதியான குறுகிய அரசியல் நோக்கங்கள் இனியும் வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கை கட்டியெழுப்புவோம். 
                    -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


அரசாங்கம் முஸ்லிம்களுடைய மத உரிமைகளை இல்லாதொழிக்கின்றபோது அரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து அமைதியாகவே இருக்கிறது. அவர்கள் மேடைகளில் பேசுவதால் மட்டும் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது.  அரசின் பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரவுமில்லை. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுமில்லை.  

- ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்


முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக வெளிநாட்டு இராஜதந்திர பதவிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளை தனிநபர்களின் நலன்களுக்காக கோரிவருகிறது. பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தையே விமர்சிப்பதற்கு அக்கட்சிக்கு எந்தவித யோக்கியதையும் கிடையாது.

- சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 

தேர்தலில் வியூகம் வகுக்கத் தெரியாத முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிகள் உடைக்கப்பட வேண்டும் என கனவு காண்கிறது. சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய தேவையுள்ளது. ஒரு சில குழுக்கள் பள்ளி உடைப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதற்கு அரசு பொறுப்பல்ல. முஸ்லிம்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஜனாதிபதி இனக்குரோதத்தை ஏற்படுத்த முனைவாரா?
-அமைச்சர் அதாவுல்லாஹ், தலைவர், தேசிய காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எமது கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும் எம்மைவிடுத்து வேறு யாருடனும் எந்த மாகாண சபையிலும் கூட்டணி ஏற்படுத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. எமது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் கடந்த தேர்தல்களில் அவர்கள் எம்முடன் இணைந்திருந்தவர்கள் அல்லர். எனினும் ஏனைய இரு மாகாண சபைகளை விடவும் கிழக்கு மாகாண சபையில் நாம் சற்று பின்னடைவிலேயே இருக்கிறோம்.

-பஷில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்


தமிழ் தேசிய அரசியல் இதுவரை காலமும் எந்தப் பதவிகளுக்கும் சோரம்போகாது தனது மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலில் பதவிகள் இல்லாமல் கட்சியை நடத்த முடியாத அவல நிலையில் உள்ளது. இந் நிலை மாற்றப்பட வேண்டும்.
  
- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்


 முஸ்லிம் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெறும்பட்சத்தில் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. அதேபோன்று த.தே.கூட்டமைப்பு தனிப் பெரும் கட்சியாக வெற்றியீட்டினால் நாம் ஆட்சியமைப்பதற்கு மு.கா. உதவ முன்வர வேண்டும். 
  
- இரா.சம்பந்தன் எம்.பி., தலைவர், த.தே.கூட்டமைப்பு

பள்ளிவாசல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் வீறாப்போடு பேசும் ஹக்கீம் இந்த நாட்டின் உயர்சபையான பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்த சந்தர்ப்பத்திலும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டார். இவர் என்ன முகத்துடன் இங்கு வந்து வீராப்புப் பேசுகிறார். இவ்வாறு சமூகத்தைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் பேசாது சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதற்காகவா மறைந்த தலைவர் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்?  
அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,  தலைவர், அ.இ.மு.கா.

பசித்த பிராணிகளும் உணவுத்தட்டும்


-மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி) 
 எம்.ஏ (லண்டன்)

 வெறி கொண்ட பிராணிகள் உணவுப் பாத்திரங்களை நோக்கி வேகமாகப் பாவதைப் போல மற்ற சமூகத்தவர் ஒரு காலத்தில் முஸ்லிம்களை நோக்கிப் பாய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எதிர்வு கூறினார்கள். அந்த நிலைமையை இன்று பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. 

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் உம்மத் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை, அகதி வாழ்க்கை, கொலை, கொள்ளை, அழிவு, கற்பழிப்பு, வறுமை, அறியாமை என முஸ்லிம் சமூகத்தின் துன்ப துயரங்களின் பட்டியல் நீளுகின்றது. 

சர்வதேச ரீதியில் பலஸ்தீன், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், செச்னியா, சிரியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் அழுகுரல்கள் எமது காதுகளை வந்தடைந்த வண்ணமுள்ளன. அவற்றையெல்லாம் மிஞ்சி விடும் வகையில் மியன்மார் (பர்மிய) முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் அழிவு நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களை பலாத்காரமாக மத மாற்றுதல் உலகம் எங்கும் இல்லாத வகையில் மியன்மாருக்கே உரிய பாதகச் செயலாக விளங்குகின்றது. 

சீன முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இரும்புத் திரைக்குப் பின்னால் அம் முஸ்லிம்களின் மத உரிமைகளும் மனித உரிமைகளும் பலாத்காரமாக மீறப்படுகின்றன. அம்மக்கள் மீதான நீண்ட கால அடக்கு முறைகள் தற்போதுதான் மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரிய வருகின்றன. 

அண்டை நாடான இந்தியாவில் இந்துத் தீவிரவாதிகளின் கை எப்போதுமே ஓங்கி இருக்கும். முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு அங்கு குறைவே இருக்காது. பெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம்கள் கையாலாகாதவர்களாகவும் அறியாமை, வறுமை என்பவற்றால் பீடிக்கப்பட்டவர்களாகவுமே வாழுகின்றார்கள். இந்தியா மிகவும் பரந்த, விசாலமான நாடு என்பதால் முஸ்லிம்களுக்கு நடைபெறுகின்ற அநியாங்களை வெளியுலகு கண்டு கொள்வதில்லை. 

அடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வருவதையறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சியடையவும் வேண்டும். அதேவேளை இஸ்லாத்துக்கெதிரான தீய பிரசாரங்களும் முஸ்லிம்கள் மீதான துவேஷமும் (கீச்ஞிடிண்ட்) முஸ்லிம்களுக்கெதிரான தேசியவாதமும் (‡ச்ணாடிணிணச்டூடிண்ட்) வளர்க்கப்படும் இடங்களாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. இந்நாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைக்கு ஸியோனிஸமும் தீவிர வலதுசாரிக் கிறிஸ்தவமும் காரணிகளாக விளங்குகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய நெறி முறைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் கணிசமான அளவு இருப்பதைப் போலவே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட வழியிலும் குற்றச் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபடும் முஸ்லிம்களும் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களின் பெயர்களையும் இனத்தையும் வைத்தே மேலைத்தேய நாடுகள் முஸ்லிம்களை கணிக்கின்றன. இஸ்லாத்தின் மீது மேலை நாட்டவர் வெறுப்படைய இவர்களின் நடவடிக்கைகள் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் இந்தியா, பர்மா, சீனா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் வெளிப்படையான வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்வதில்லை. 

ஆனால் பொறுப்பற்ற முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகி இரண்டாந்தரப் பிரஜைகளாக மேல் நாட்டு சமூகத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். அம் முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை சீர்த்திருத்திக் கொள்வார்களானால் இஸ்லாம் மேலும் வேகமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை. இது மேல்நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா நாட்டுக்குமே பொருந்தும். 

அடுத்து ஆபிரிக்கக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் இதனை முஸ்லிம் கண்டம் என வர்ணிக்கும் அளவுக்கு அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகின்றது. மொத்த ஆபிரிக்காவின் 1051 மில்லியன் மக்களில் முஸ்லிம்கள் 554.32 மில்லியனாகவும் சுதேச நம்பிக்கையைப் பின்பற்றுவோர் 100 மில்லியனாகவும் கிறிஸ்தவர்கள் 304 மில்லியனாகவும் உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் பல ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. உள்நாட்டுப் போர்,  கல்வி அறிவின்மை, இன கோத்திர முறுகல் என்பவை முஸ்லிம்களை பின்தங்கிய சமூகமாகவும் கிறிஸ்தவ உலகின் உணவுத்தட்டை போலவும் வாழ வைத்துள்ளது.

சர்வதேச ரீதியில் எமது சகோதர முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற துன்ப துயரங்களையும் அவலங்களையும் விரிவாக ஆராவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவற்றை மேலோட்டமாக தொட்டுக்காட்டிய பின்னர் நம் நாட்டில் நாம் படும் அவஸ்தைகளையும் நாளாந்தம் நாம் எதிர்நோக்கும் சவால்களையும் சற்று விரிவாக நோக்குவதே எமது நோக்கமாகும். 

இலங்கையைப் பொறுத்தவரையில் எமது நீண்ட கால வரலாற்றில் ஏனைய சமூகங்களுடனான உறவு பெரும்பாலும் சுமுகமாகக் காணப்பட்டு வந்துள்ளது. எழுபதுகளின் இறுதிப்பகுதியில் புலிகளின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் முன்னர் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர பெரிய அளவில் முஸ்லிம்களின் இருப்புக்கோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சோந்த மண்ணிலிருந்து  அவர்கள் வெளியேற்றப்படவில்லை. 

எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த போது இலக்கையும் இலட்சியத்தையும் மறந்து தமது துப்பாக்கிகளை நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பக்கம் நீட்டினார்கள். பசித்த பிராணிகள் உணவுத் தட்டை நோக்கிப் பாவதைப் போல அப்பாவி முஸ்லிம்கள் மீது பாந்து வெறியாட்டம் ஆடினார்கள். அக்காலப்பகுதியில் வட கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கஷ்ட நஷ்டங்கள் உயிர் உடமை இழப்புக்கள் எண்ணிடலங்காதவை. எதற்கும் ஒரு முடிவு இருப்பதைப்போல் புலிகளின் திசைமாறிய போராட்டத்துக்கும் ஒரு முடிவு வந்தது. 

எகிப்து தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு பச்சைக்கொடி

எகிப்து அரச தொலைக்காட்சிகளில் தலையை முழுமையாக மறைக்கும் ஹிஜாபுக்கு இருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த தடையானது நீக்கப்படுவதை உறுதி செயும் விதமாக ஹிஜாப் அணிந்த நிலையில் பாத்திமா நாபில் என்பவர் முதன் முதலாக அந்நாட்டு அரச செதித் தொலைக்காட்சியான செனல் - 1 இல் செதி வாசிப்பது ஒளிபரப்பப்பட்டது. 

ஹுஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் எகிப்தில் இஸ்லாம் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட்டு வரும் நிலையிலேயே மேற்படி மாற்றமும் நிகழ்ந்துள்ளது. 
முன்னதாக கடந்த ரமழான் மாதம் பெண்கள் மட்டும் கடமையாற்றும் இஸ்லாமிய தனியார் தொலைக்காட்சியொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டமையும் அது அங்கு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

2002ஆம் ஆண்டு சப்வாத் அல் ஷரீப் ஊடக அமைச்சராக இருந்த போது அரச தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில் ஹிஜாப் அணிந்து செதி வாசித்து புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்த பாத்திமா நாபில் அரபு வசந்தம் தற்போது தொலைக்காட்சியையும் வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

புஷ், பிளேயருக்கு எதிராக விசாரணை நடத்துக


வலியுறுத்துகிறார் டெஸ்மன் டுடு
ஈராக் மீது தக்க காரணங்களின்றி தாக்குதல் மேற்கொண்டமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோருக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றில் விசாரணைகள் அவசியம் என சமாதானத்துக்கான நோபல் பரிசினை வென்ற டெஸ்மன் டுடு தெரிவித்தார்.


பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல ஒப்சேவர் நாளிதழுக்கு வழங்கியுள்ள விஷேட செவ்வியிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். குறித்த செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈராக்கில் ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்தும் நோக்கிலேயே இவர்கள் பொக் காரணங்களைக் கூறி யுத்தமொன்றை ஆரம்பித்தனர். இதனால்  ஈராக்கில் பாரிய உயிர்ச் தேசங்கள் நிகழ்ந்ததோடு சர்வதேச ரீதியில் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போன்று வரலாற்றில் ஒரு போதும் ஏற்படவில்லை.

பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இரசாயன ஆயுதங்களை சதாம் ஹுசைன் வைத்திருப்பதாக புஷ்ஷும் உலகின் நன்மைக்காக அவர் (சதாம்) பதவியிறக்கப்பட வேண்டுமென டொனி பிளேயரும் ஈராக் மீதான போருக்கு நியாயம் தேடியதாகவும் இதனால் அவ்விருவரையும் தவிர வேறு எவரும் நன்மையடையவில்லை எனவும் டெஸ்மன் டுடு குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் தகாத உறவு விவகாரம் - சிறுமிக்கு 100 கசையடிகள்


மாலைதீவில் சம்பவம்

மாலைதீவில் தன்னை விட வயதில் கூடிய ஒருவருடன் பாலியல் உறவினை வைத்துக் கொண்ட 16 வயதுடைய சிறுமிக்கு 100 கசையடிகளுடன் 08 மாதகால வீட்டுக் காவலையும் அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ளது. குறித்த சிறுமி 29 வயதுடைய நபரொருவருடன் தனது குடும்பத்தாரின் கண்டிப்பையும் மீறி உறவு வைத்துக் கொண்டமையை ஒப்புக் கொண்டதையடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறைந்த வயதுடையவரிடம் (சிறுமி) உறவு வைத்துக் கொண்ட குற்றத்திற்காக குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர் 18 வயதினை பூர்த்தி செத பின்னரே அமுல்படுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செதி வெளியிட்டுள்ளன. 

மாலைதீவில் திருமணத்துக்கு மேலதிகமான பாலியல் உறவுகளுக்காக பெண்களுக்கு விதிக்கப்படும் வெளிப்படையான கசையடி தண்டனைக்கு ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவி நவனீதம் பிள்ளை அழுத்தம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு 10 மாதங்களின் பின்னர் குறித்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குர்ஆன் பக்கங்களை எரித்த கிரிஸ்தவ சிறுமி சிறையில்

இமாம் ஒருவரும் கைது

புனித குர்ஆனின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சிறுமி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் இமாம் ஒருவர் கைதுசெயப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் ரிம்ஷா மசி (வயது 11) என்ற சிறுமி புனித குர்ஆனின் பக்கங்களை எரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சமீபத்தில் கைது செயப்பட்டாள். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மெஹ்ரியா ஜாஃபரில் உள்ள ஜாமாயா அமினியா மசூதியின் இமாம் காலித் சிஸ்டியை பொலிஸார் கைது செதனர்.

ஹபீஸ் முஹம்மது ஜுபைர் என்பவர் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த சாட்சியத்தின் பேரில் இமாமை கைது செததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

இமாம் சிஸ்டி ரிம்ஷாவின் பையில் குர்ஆன் நூலின் சில பக்கங்களை  வேண்டுமென்றே போட்டதாக ஹபீஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதை அப்போதே  பார்த்த ஹபீஸ் ஏன் இப்படிச் செகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ்தவ மதத்தினரை இந்தப் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக இப்படிச் செவதாக இமாம் கூறியதாக ஹபீஸ் கூறியுள்ளார்.

கைது செயப்பட்டுள்ள இமாமுக்கு குர்ஆன் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுவும் செங்கல்லும் - அல்ஹதீஸ்

Blogroll