சனி, 22 செப்டம்பர், 2012

பிக்ஹ் அல் அவ்லவியாவும் ஹஜ் கடமையும்

அஷ் ஷெய்க்
எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
ஹஜ் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று. முஸ்லிமான பருவமெய்திய சித்த”வாதீனமுள்ள அடிமையல்லாத, சக்தி படைத்த அனைவர் மீதும் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகிறது. அதற்கு மேலதிகமாக செய்யப்படும் அனைத்து ஹஜ்ஜும்  ஸுன்னத்தாகவே நிறைவேறும். நேர்ச்சைக்குரிய ஹஜ் ஆயின் வாஜிபாகிறது.

உரிய விதத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றி நாடு  திரும்புவோர் அன்று பிறந்த பாலகனைப் போல் பாவங்கள் மன்னிக்கப்பட்டு திரும்பி வருகின்றார்கள். உரிய முறையில் நிறைவேற்றப்படும் ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலியாகும். ஹஜ்ஜின் மகிமை பற்றி அல் குர்ஆனும் அல் ஹதீஸும்  வலியுறுத்திக் கூறியுள்ளன. எனவே வருடாந்தம் லட்சோபலட்சம் மக்கள் புனித மக்காவை நோக்கி பயணித்து ஹஜ்ஜை நிறைவேற்றி ஆன்மிக  பரிபக்குவத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். துல்ஹஜ் மாதத்தில் மட்டுமின்றி வருடத்தின் ஏனைய மாதங்களிலும் குறிப்பாக ரமழானிலும் உம்ராவுக்குச் செல்வோரின் தொகை முன்னெப்போதையும்விட அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

ஆனால் ஹஜ் செய்வதற்கான வசதி படைத்தவர்கள் மீது ஹஜ் ஆயுளில் ஒரு தடவை மாத்திரமே கடமையாக இருக்க, வருடாந்தம் ஹஜ் செய்பவர்களின் தொகை அதிகரிக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது. முதல் தடவையாக ஹஜ் செய்வோர் மொத்த ஹஜ்ஜாஜிகளில் 15 வீதம்  மாத்திரமே என்று கலாநிதி யூஸுப்  அல்கர்ளாவி  குறிப்பிடுகின்றார். இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) ஹஜ்ஜாஜிகளில் மூன்று இலட்சம் பேர் மாத்திரமே முதல் தடவையாக ஹஜ்  செய்கின்றனர் என்பது அவரது கணிப்பீடாகும். அப்படியாயின் பதினேழு இலட்சம் பேர் இரண்டாவது தடவையாக அல்லது 10 ஆவது 30 ஆவது தடவையாக ஹஜ் செய்கின்றனர். சிலர் தொடர்ந்து 40 ஆவது தடவையாக ஹஜ்ஜுக்குச் செல்கின்றனர். வருடாந்தம் ஹஜ்ஜுக்கும் ரமழானில் உம்ராவுக்கும் செல்வோர் பலர் இருக்கின்றனர். தாம் மாத்திரம் செல்லாது தம்முடன் இன்னும் பலரையும் தமது செல்வத்தில் அழைத்துச் செல்லும் செல்வந்தர்களும் உலகில் இல்லாமலில்லை.

ஒரு தடவை  கட்டார் நாட்டிலிருந்து வருடாந்தம் ஹஜ் செய்யும் ஒரு குழுவைச் சந்தித்த  கலாநிதி கர்ளாவி  அவர்கள் பின்வருமாறு கேட்டார்கள். “இந்தோனேசியாவில் முஸ்லிம்களை  மத மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள்  பாரிய திட்டத்தை தீட்டி செயற்பட்டு வருகின்றன. எனவே முஸ்லிம்களைப் பாதுகாக்க தரமான இஸ்லாமிய ஸ்தாபனங்களும் உருவாக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் சமூக சேவைகளிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு முஸ்லிம்களை மதமாற்றி வருவதால் முஸ்லிம் சமூகத்திலும் இஸ்லாமிய நடவடிக்கைகளை  நீங்கள் மேற்கொண்டால்தான் இஸ்லாம் பாதுகாக்கப்படும். எனவே இவ்வருடம் நீங்கள்  ஹஜ்ஜுக்குச் செல்லாது  அதற்குச் செலவாகும் பணத்தை  கிறிஸ்தவப் பிரசாரத்திலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குச் செலவிடுங்கள்” என்று கூற, அவர்கள் துல்ஹஜ் மாதமாகிவிட்டால் ஹஜ் செய்ய வேண்டுமென்ற வேட்கை உருவாகி விடுகிறது. எமது ஆத்மாக்கள் மக்காவில் சிறகடிப்பது போன்ற உணர்வை நாம் பெறுகின்றோம். அங்கு சென்றால்தான் பெரு நிம்மதி ஏற்படுகின்றது’ என்று கூறினர்.

இவர்கள் இத்தகைய பாரிய பணத் தொகையைச் செலவு செய்து ஆன்மிக நிம்மதி கண்டு வாழும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தில்  எத்தனையோ கோடி மக்கள் பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பல குழந்தைகள் கவனிப்பாரற்ற அநாதைகளாகவே வானமே கூரையாக தரையே விரிப்பாக நிச்சயமற்ற எதிர்காலத்தினை நோக்கிக் கை நீட்டுகின்றனர். திணிக்கப்பட்ட கோர   யுத்தங்களுக்கு பல இலட்சம் முஸ்லிம்கள் பலியாகி சொந்த வாழிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக அல்லல்படுகின்றனர். கோடிக் கணக்கான நோயாளிகள் ஒரு சிறிய மருத்துவ உதவி கூட இல்லாமல் மரணத்தின்  பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அறியாமை, மூட நம்பிக்கை, வேலையின்மை போன்றவற்றாலும் பல பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் உம்மத்தின் இன்றைய சூழலில் ஸுன்னத்தான ஹஜ் செய்து ஆத்மானந்தம் பெறுவதை அல்லாஹ் விரும்புவானா? அவ்ரத்தை மறைக்கும் தேவை இருக்கையில் அது பற்றிக் கரிசனை எடுக்காது தலையில் தொப்பியணிய  ஆசைப்படுவது முறையல்ல.

மஸ்ஜிதுல்  அக்ஸாவை கபளீகரம் செய்து காட்டு தர்பார் நடத்தும் யூதர்களை எதிர்த்துப்  போராட, மியன்மாரில், ஈராக்கில், ஆப்கானில்    கொல்லப்பட, உலகெங்குமுள்ள முஸ்லிம்கள்  தமக்காக வாய்திறக்க மாட்டார்களா  என ஏங்கும் முஸ்லிம்களுக்கு உதவ பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறும் கிறிஸ்தவ சிந்தனை படையெடுப்பை எதிர்கொள்வதற்கு  நாம் தயாராக வேண்டியிருக்கிறது. தஃவா  நிலையங்களை அமைத்து  தாஈகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. இஸ்லாமிய வெளியீடுகளை செய்யப் பதிப்பகங்களை அமைக்க   வேண்டியுள்ளது என்று இத்தகைய ஹாஜிகளிடம் யாராவது கூறினால் அதை அவர்கள்  தூசுக்கும் மதிப்பதில்லை.

ஆனால்  சிந்தனா, கலாசார படையெடுப்புக்கு எதிராக போராடுவது    ஹஜ் கிரியை விடவும் சிறந்தது என அல்குர்ஆன் கூறுகிறது.

ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை நிர்வகிப்போரையும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட அவனது பாதையில் அறப்போர் செய்தவர்களுக்கு சமமாக்கி விட்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இவ்விருவரும் சமமாக மாட்டார்கள். (அத் தௌபா 19,20)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். கடைசிக் காலத்தில் காரணமின்றி ஹஜ்ஜாஜிகளது தொகை அதிகரிக்கும்.  அவர்களுக்கு ஹஜ்ஜுப் பயணம் மிக இலகுவாக இருக்கும், ஜீவனோபாயம்  தாராளமாக இருக்கும். ஆனால் ஹஜ்ஜில் மீளும் போது அவர்கள் எதனையும்  கொண்டுவர மாட்டார்கள். ஆனால் அவர்களது பக்கத்து வீட்டானோ கைதியாக இருப்பான். எந்த ஹாஜியும் அவனுக்கு உதவி செய்து அவனை சந்தோசப்படுத்தவும் மாட்டான்’  என்றார்.

ஒரு தடவை பிஸ்ர் இப்னு ஹாரித் அவர்களிடம் வந்த ஒருவர் தான் ஹஜ் செய்ய நாடி இருப்பதாகவும் தனக்கு உபதேசிக்கும் படியும் வேண்டிக் கொண்டார். அதற்கு பிஸ்ர் அவர்கள் உம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு அவர் இரண்டாயிரம் என்று கூறவே உனது ஹஜ்ஜின்  மூலம்  எதனை அடைய நாடுகிறீர்கள் என பிஸ்ர் வினவினார். அதற்கு அவர் உலகப் பற்றற்ற மனோ நிலை அல்லது கஃபாவின் மீதான வேட்கை அல்லது அல்லாஹ்வின் திருப்பொருத்தம்’ என்று பதிலளித்தார். அதற்கு பிஸ்ர் நீர் உமது வீட்டில் இருந்து கொண்டே  இரண்டாயிரம் திர்ஹங்களை செலவழித்து  அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வழிவகை காட்டவா? என்றார். அதற்கு அவர் ஆம் என்று கூறவே நீர் தற்போது போய் இந்த இரண்டாயிரம் திர்ஹம்களை  பத்துப் பேருக்கு பங்கீடு செய்வீராக!

‘கடனை அடைப்பதற்காக கடனாளிக்கு கொடுப்பாயாக. ஓர் ஏழைக்குக் கொடு. அவன் தனது இழந்த செழுமையை மீண்டும் பெறட்டும். குடும்ப ஏழ்மையைப் போக்க ஒரு குடும்பஸ்தனுக்கு வழங்குவாயாக. ஓர் அநாதையை பராமரிக்கும் ஒருவருக்கு நீர் கொடு. அநாதை அதனால் பயனடைந்து மகிழ்ச்சியடையக் கூடும். இந்த பணத் தொகை அனைத்தையும்  ஒரு நபருக்கு உன்னால் கொடுக்க முடியுமாயின் அவ்வாறு செய். ஏனெனில் ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில்  உன்னால் சந்தோசத்தை தோற்றுவிக்க முடியுமாயின் ஒருவனது துக்கத்தை போக்க முடியுமாயின் துயரத்தை விரட்ட 


முடியுமாயின் பலவீனனுக்கு கைகொடுத்து உதவ முடியுமாயின் முதல் தடவையாக செய்யப்பட்ட ஹஜ்ஜுக்குப் பிறகு செய்யப்படும் நூறு ஹஜ்ஜைவிட சிறந்ததாகும். எனவே எழுந்து சென்று நாம் கூறியது போல அப்பணத்தை செலவு செய்வீராக அல்லது உமது உள்ளத்தில் உள்ள எண்ணம் யாது என்று சொல்? என்றார்கள்.
அதற்கு அவர் ஹஜ்ஜுப் பயணம் தான்  எனது உள்ளத்திற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது’ என்றார். இதனை கேட்டு புன்னகை பூத்த பிஸ்ர் அவர்கள் செல்வமானது அழுக்கான (ஹராமான) வியாபாரம் மூலம் அல்லது  சந்தேகத்திற்கிடமான வழிகள் மூலம் திரட்டப்படுமானால் அச் செல்வங்கள் மனோ  இச்சைப்படியே  செலவழிக்க வேண்டும் என்றுதான் உள்ளம் விரும்பும்’ என்று இறுதியாக கூறினார்.


இன்று  மாத்திரமின்றி வரலாற்றில் இத்தகைய மனிதர்கள் பலர் இருந்துள்ளனர் என்பதையே இச் சம்பவம் காட்டுகிறது. மார்க்கம் பற்றிய தெளிவு, எது சுன்னத் எது பர்ளு என்பதை உரிய விதத்தில் உலமாக்கல் உணர்த்தாமல் இருப்பதும் இத்தகைய  குளறுபடிகளுக்குக் காரணமாகும். சுன்னத்தான ஹஜ்ஜை நிறைவேற்ற முனைபவர்கள், நவீன  காலத்தில் நாஸ்திகதவாதத்திற்கும் ஒழுக்க சீர்கேட்டிற்கும் இவற்றிற்கு துணை போகும் உள்ளார்ந்த வெளிச் சக்திகளுக்கும் எதிரான போராட்டம் இன்றைய காலத்தின் தேவையும் கடமையும் என்பதை மறந்து விடலாகாது.

ஒரு சர்ச்சை 
சில வருடங்களுக்கு முன்னர்  பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரும் எழுத்தாளருமான  பஹ்மி ஹுவைதி அவர்கள் பர்ளான ஹஜ் செய்வதை விட பொஸ்னியாவை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எழுதினார். இவரது கருத்தை வாசித்த பலர் தடுமாறிப் போயினர். கலாநிதி கர்ளாவி அவர்களிடம் இது பற்றி விளக்கம் கோரிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார். பிக்ஹ் அடிப்படையில் நோக்கும் போது அவர் கூறியது ஒரு வகையில் சரியானதுதான். காரணம் என்னவெனில் காலம் தாழ்த்தி நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட உடனடியாக நிறை@வற்ற @வண்டிய கடமைகளை முற்படுத்த வேண்டும். அதாவது முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது ஷரீஅத்தால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகும். பர்ளான ஹஜ்ஜை காலம் தாழ்த்தியும் நிறைவேற்றலாம் என்பது சில இமாம்களது   கருத்தாகும். ஆனால் பட்டினி  கடும் குளிர், நோய் என்பவற்றின் அழிவிலிருந்து பொஸ்னியா முஸ்லிம்களை பாதுகாப்பது  கட்டாய கடமையாகும். அதனை எவ்வகையிலும்  பிற்படுத்த முடியாது. அது காலத்தின் தேவையாகும்.  ஆனால் மக்காவுக்கு அருகில் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ஹஜ்  செய்வதற்கு அதிக பணச் செலவு ஏற்படமாட்டாது.  அவர்கள் முதல் தடவையாக  ஹஜ் செய்ததாயின் காலம் தாழ்த்தாமல் அதனை நிறைவேற்ற வேண்டும்.

முதல் தடவை ஹஜ் செய்வது கடமை என்பதை நாம் மறுக்கவில்லை. வாழ்நாள்  முழுவதும் சுன்னத்தான ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சென்று வருவோர்  பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம். 

அவர்கள் இவ்வாறு செய்யாமல் அதற்காக செலவாகும் பணத்தை மார்க்கம் அவசியப்படுத்தும்   கருமங்களுக்காக செலவழிக்க  வேண்டும். அவர்களின் நல்லெண்ணத்தைப் பொறுத்து சுன்னத்தான ஹஜ்ஜின் கூலியை விட அல்லாஹ் அவருக்கு பன்மடங்கு நன்மைகளைப் கொடுப்பான். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இருவித பலன்கள் கிட்டும். 

01. இஸ்லாமிய பிசாரத்திற்காகவும் அந்நிய சதித் திட்டங்களிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கவும் பட்டினிச்சாவு, யுத்த அனர்த்தங்கள், படிப்பறிவீனம், அரசியல் அராஜகங்கள் போன்றவற்றில் இருந்து  பாதுகாக்காகவும் அப்பணத்தை செலவிட்டால் அது பெரும் ஜிஹாதாக அமையும்.

02.  ஹஜ் செய்ய வருவோரது தொகையை மட்டுப்படுத்தலாம். தற்போது சனநெருக்கடி அதிகமாக இருப்பதால் முதல் தடவையாக ஹஜ் செய்வோருக்குக் கூட திருப்திகரமாக தமது ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது.  தங்குமிடம் உணவு, போக்குவரத்து வசதிகள் தாராளமாக கிடைத்தால் ஹஜ்ஜின் செலவு குறைய வாய்ப்பிருக்கிறது.

இஸ்லாத்தில் எதனை முற்படுத்த வேண்டும் என்பதற்கும் ஒரு பிக்ஹ் இருக்கிறது. இந்த பிக்ஹ் அறிவின்மைதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மீள் உருவாக்கப் பணியில் பல்வேறு  தராதரக் குழப்பங்கள் நிலவுவதற்கான  அடிப்படைக் காரணமாகும். இஸ்லாம் என்பது ஏவல்களை ஏற்று விலக்கல்களை தவிர்த்து வாழ்வதாகும். இந்த ஏவல்களிலும் வாஜிப், பர்ள், சுன்னத், முபாஹ்  போன்ற படித்தரங்கள், இருப்பதைப் போன்று விலக்கல்களில் ஹராம், மக்ரூஹ் போன்ற படித்தரங்கள் இருக்கின்றன. இந்த பிக்ஹை பின்பற்றாததன் விளைவே நமது  எழுச்சி மந்த கதியில்  செல்வதற்கான காரணமாகும்.

வருடா வருடம் அதிகரித்துவரும் ஹஜ் ஏற்பாட்டு ஒழுங்கீனங்கள்


மௌலவி @ஜ.மீரா முகைதீன்
(முன்னாள் பிரதிப் பணிப்பாளர்
மு.ச.ப.அ.திணைக்களம்)
கடந்த பல வருடங்களாக இலங்கையில் ஹஜ் ஏற்பாட்டு விடயங்களில் பல ஒழுங்கீனங்கள் இடம்பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை. ஹஜ்ஜுக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்களாலும், திணைக்களத்தினாலும் முகவர் நிலையங்கள் மூலமும் ஹஜ் பயணிகள் விடயத்தில் கரிசனை காட்டி செயல்படுகின்றோம் என்ற கருத்தில் பத்திரிகைகளில் செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டதுடன் வானொலியிலும் செய்திகளை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இறுதியில் பார்த்தால் பயணிகளின் நலன் விடயத்திலும்à ஒழுங்குகள் விடயங்களிலும் பூச்சியமே தென்படுகின்றது.

ஹஜ் பயண ஒழுங்குகளில் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக முகவர் நிலையங்களைத் தெரிவு செய்தல், கட்டணத்தை தீர்மானித்தல், கிடைக்கப் பெற்ற கோட்டாவை பகிர்வு செய்தல் ஆகிய இம் மூன்று விடயங்களிலும் சென்ற வருடத்தைப் போன்றே இவ்வருடமும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

ஹஜ் பயண ஏற்பாட்டிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட முகவர் நிலையங்கள் சென்ற வருடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வருட கோட்டா அதிகரிக்கப்படாததன் காரணமாக அம்முகவர் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தெரிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் எவ்வடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர், அவைகளுக்கான நேர்முகப் பரீட்சை எப்போது இடம்பெற்றது என்பன போன்ற விடயங்கள் பரம இரகசியமாக@வ உள்ளன. 

திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஹஜ் முகவர் நிலையங்களுக்கான பதிவு பிரதிவருடமும் இடம்பெறுவதே வழமை. அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவர். இம்முறை திணைக்களம் ஹஜ் முகவர்களைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரவில்லை, முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறவுமில்லை. அத்துடன் தாமே தெரிவு செய்து கொண்ட முகவர் நிலையங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் இல்லை. இவைகள் அனைத்தும் வழமைக்கு மாற்றமானதும் அத்துடன் இதுவோர் அரசாங்க திணைக்களம் என்ற வகையில் சட்டத்திற்கு முரணானதுமாகும். இதனாலேயே பல முகவர் நிலையங்கள் நியாயம் வேண்டி நீதி மன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்திற்கான கட்டணம் முன்பெல்லாம் விலைமனுக்கோரல் மூலம் பெறப்பட்டு அதனை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி ஹஜ் பயணிகள் தாம் விரும்பிய முகவர் நிலையங்களுடன் தாம் விரும்பிய கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. இம் முறை சில வருடங்களாக பின்பற்றப்படுவதில்லை. சென்ற வருடம் திணைக்களம் ஆகக்கூடிய கட்டணம்  375,000 ரூபாவாக வரையறுத்திருந்தது. ஆனால் ஹஜ் பயணிகள் அதனை விடவும் கூடுதல் கட்டணம் செலுத்தியே ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இம்முறை அமைச்சர் பத்திரிகை விளம்பரத்தின் மூலமும் பணிப்பாளர் தாம் பங்குபற்றிய ஒவ்வொரு மாவட்ட கூட்டத்திலும் ஆகக் கூடிய கட்டணம்  425,000 ரூபா என திட்டவட்டமாகக் கூறியிருந்தும் இது வரை 95 வீதமான ஹஜ் பயணிகள் 525,000 ரூபாவு க்கும் மேற்பட்ட தொகையினைச் செலுத்தியே ஹஜ்ஜுக்காக பதிவு செய்துள்ளனர். ஒரு சிறிய தொகையினரே அனைத்து முகவர் நிலையங்களையும் அணுகி இயலாதபட்சத்தில் தமது கடவுச் சீட்டுக்களை திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை திணைக்களம் சில முகவர் நிலையங்களில் இணைப்பர். அம் முகவர் நிலையங்கள் இவர்களை மிகத் தூரத்தில் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து இம்முறையும் முகவர் நிலையங்கள் தாம் திட்டமிட்டுள்ள ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இலாபத்தினை அடைவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சென்ற முறை ஒருவர் மூலம் ஒரு இலட்சம் இலாபம் பெற்றவர்கள் இம்முறை அதனை விடவும் கூடுதல் இலாபம் பெறும் திட்டத்தில் இருக்கின்றனர். ஒரு ஹஜ் பயணியிடமிருந்து ஐந்து இலட்சத்திற்கு மேல் அறவிடும் முகவர் நிலையங்கள் ஹஜ் பயணிகளை மக்காவிலிருந்து அஸீஸிய்யா போன்ற தூர இடங்களில் தங்குமிட வசதிகளைச் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. ஆனால் 99 வீதமான முகவர் நிலையங்கள் கூடிய தொகையினை அறவிட்டும் ஹஜ் பயணிகளை ஹஜ் காலத்தின் போது தூரப் பிரதேசத்தில் தங்குமிட வசதிகளைச் செய்யும் திட்டத்திலேயே இருக்கின்றனர் என்ற செய்தியை உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன். 

அத்துடன் இம்முறை உலகிலிருந்து ஹஜ் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால் மக்காவில் தங்குமிடங்களின் கட்டணத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் அமைச்சருக்கும் மற்றும் பணிப்பாளருக்கும் நன்றாகத் தெரிந்தும் இவர்கள் ஏன்இதுவிடயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. எனது அனுபவத்தைப்பொறுத்த வரையில்  இலங்கையிலிருந்து ஹஜ் செய்பவர்களில் மிக சொற்ப தொகையினரே செல்வந்தரான நிலையிலிருந்து பயணச் செலவினை பொருட்படுத்தாது ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர், மற்றைய அனைவரும் தாம் அரசாங்க உத்தியோகத்தராக இருந்து அல்லது தனிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகையில் ஹஜ் செய்பவர்களும், தாம் விவசாயம் செய்து சிறிது சிறிதாக சேர்த்த பணத்தில் ஹஜ் செய்பவர்களும், வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் தமது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரு நன்றிக்கடனாக பலர் சேர்ந்து பெற்றோர்களை ஹஜ்ஜுக்காக தயார் செய்யப்படும் ஹஜ் பயணிகளே அதிகம். இந்நிலையில் ஒருவரது கட்டணத்தில் ஒரு இலட்சம் ரூபாய் கூடுதலாக அறவிடப்படுகின்றது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அதுவோர் பாரிய தொகையாகும். அதே நேரத்தில் மேற் குறிப்பிடப்பட்ட 425,000 ரூபாவு க்கும் மற்றும் அதற்கு குறைவான தொகையிலும் அழைத்துச் செல்ல பல முகவர் நிலையங்கள் தயார் நிலையில் இருக்கும் போது அவர்களை புறக்கணித்திருப்பது ஏன் என பலரும் @கள்வியெழுப்புகின்றனர்.

இம் முறை வழமையாக இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2800 கோட்டா மாத்திரமே எனவும் வழமையாக அதிகரித்து வழங்கப்படும் தொகை இம்முறை வழங்கப்படாததினால் 2800 பேர் மாத்திரமே ஹஜ் செய்யும் வாய்ப்பு இருக்கின்றது. இக்கோட்டாவினை அமைச்சர் சில வாரங்களுக்கு முன்பு (கோட்டா கிடைக்கப்பெற்று 6 மாதங்களின் பின்) இறுதி நேரத்தில் தமக்கு நெருங்கிய முகவர் நிலையங்களின் ஆலோசனையுடன், முகவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இரவோடு இரவாக கோட்டா பகிர்வினை மேற்கொண்டுள்ளார். 150, 100, 50, 25 என தாம் விரும்பியவாறு பகிர்ந்தளித்துள்ளார். இவைகள் என்ன அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதற்கு சரியான  
எடுகோள்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 25 வருடங்களான ஹஜ் முகவராக இருந்தவருக்கும் சென்ற வருடம் ஹஜ் முகவராக பதிவு செய்தவருக்கும் 25 கோட்டாக்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று ஒரு முகவராக செயல்படுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் அனைத்து தகைமைகளையும் கொண்ட முகவர் நிலையங்களுக்கும், அனுபவத்தினைத் தவிர்ந்த வேறு எத்தகைமையினையும் கொண்டிராத முகவர் நிலையத்திற்கும் சம அளவான கோட்டாவே வழங்கப்பட்டுள்ளது. அனுபவத்தினைத் தவிர்ந்த வேறு எத்தகைமையும் கொண்டிராத முகவர் நிலையங்களுக்கு கோட்டா வழங்கப்பட்டுள்ளதுடன் மேற்கூறப்பட்ட அனைத்து தகைமையினையும் கொண்ட முகவர் நிலையங்கள் கோட்டா வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வேறு சில முகவர் நிலையங்கள் நீதிமன்றம் சென்றுள்ளன. அமைச்சர் முகவர் நிலையங்களுக்கிடையில் கோட்டாவினைப் பகிர முன்பதாக முகவர் நிலையங்களிடமிருந்து பயணத்திற்கான விலைமனுக் கோரலைப் பெற்று குறைந்த கட்டணத்தை சமர்ப்பித்துள்ள முகவர் நிலையங்களுக்கே கோட்டாவினை பகிர்ந்தளித்திருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாது கோட்டாவை பகிர்ந்தளித்ததினால் முகவர் நிலையங்கள் தாம் பெற்ற கோட்டாவினை சவூதியில் பதிவு செய்துவிட்டதினால் ஹஜ் பயணிகள் இதன் பின்பு இம் முகவர் நிலையங்களுடனேயே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதினாலும் முகவர் நிலையங்கள் தாம் நினைத்தவாறு கட்டணத்தை அதிகரித்துக் கொண்டனர். ஹஜ் பயணிகளும் தாம் பயணம் செய்ய நாடிவிட்டதனால் விருப்பம் இன்றியே இப் பெரும் தொகை கட்டணத்தை செலுத்தினர். (அமைச்சர் அவர்கள் தன் கையில் இருந்த மீன்களை கடலில் எறிந்து விட்டு திரும்ப வலை வீசும் நிலையே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது) அமைச்சருக்கும் பணிப்பாளருக்கும் இது தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

ஹஜ் விடயங்களை கவனிப்பதற்காக அரசாங்கம் இரு அமைச்சர்களுடன் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவையும் நியமித்தது. இதில் அமைச்சர்களான  ஏ. எச். எம். பௌஸி க்கும்  ஏ. ஆர். எம். ஏ. காதருகுமிடையே விரிசல் ஏற்படவே அமைச்சர் காதர் நீதி மன்றம் செல்லவே ஹஜ் விடயத்தில் மேலும் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. 

திணைக்களம் இவ்வருட ஹஜ்ஜில் செய்த ஒரு ஆக்கபூர்வமான பணி ஒன்று உண்டென்றால் அது ஹஜ் பயணத்திற்கான 2800 ஹஜ் பயணிகளையும் நேர காலத்துடன் தெரிவு செய்து கொண்டமையாகும். மேலும் அடுத்த வருடத்திற்கான 3000 பேர்களையும் தெரிவு செய்து வைத்திருப்பதுமாகும். (நான் இதுபற்றி எனது சென்ற வருட ஹஜ் சம்பந்தமான கட்டுரையில் வலியுருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது) 


எனவே அடுத்த வருட ஹஜ் பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள் (இணையதளத்தில் அவர்களது பெயர் விபரங்கள் இடப்பட்டுள்ளன) ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அடுத்த வருடத்தில் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்து கொள்வதற்கு இப்பொழுதிருந்தே செயல்பட @வண்டும். முகவர் நிலையங்களுக்காக ஹஜ் பயணிகள் என்ற நிலையை மாற்றி ஹஜ் பயணிகளுக்காக முகவர் நிலையங்கள் என்ற நிலையை உருவாக்க @வண்டும்.


ஹஜ் பயணம் ஒரு மார்க்க சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதினால் இதில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவை தலையிட்டு ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தினை முன்வைக்க வேண்டும் என எனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததுடன், அதன் தலைவரையும் நேரடியாக வேண்டியிருந்@தன். அதற்கு அதன் தலைவர் எனது திட்டத்தினை எழுத்து மூலம் கையளிக்குமாறு வேண்டியிருக்க நானும் நல்லதோர் திட்டத்தினை தயாரித்து கையளித்து, நிருவாகக் குழுவில் இது பற்றி ஆராய்ந்து மற்றும் பலரது ஆலோசனையையும் பெறு மாறு வேண்டினேன். ஒரு வருடமாகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது ஹஜ் சம்பந்தமான கலந்துரையாடல்கள் அமைச்சில் அல்லது திணைக்களத்தில் நடைபெறும் போது அவர்களின் பிரதிநிதியாக ஒரு சிலர் கலந்து கொண்டதன் மூலம் ஜம் இய்யதுல் உலமா சபையும் ஹஜ் சீர் கேட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்@ற கூற வேண்டியுள்ளது.


எனவே பல வருடங்களாக ஹஜ் விடயத்தில் குளறுபடிகள் அதிகரித்து வருவதினால் தற்போது ஹஜ் ஒழுங்குகளை மேற் கொண்டுவருபவர்கள் அவர்களது இயலாத்தன்மையை வெளிக்காட்டியுள்ளனர். எனவே இவர்கள் இப்பணியிலிருந்து ஒதுங்கி இதனை திறம்பட செய்யக் கூடியவர்களுக்கு வழி விடுவதன் மூலம் ஹஜ் விடயங்களில் நல்லதொரு மாற்றத்தினை எதிர்பார்க்கலாம் என்பது எனது கருத்தாகும்.

இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படம் உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லீம்கள்


செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். 
ஆம், இன்றைய தினம்  செப்டம்பர் 11 தான். யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய  சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. 

எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன. வழமையாக லிபியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தேர்ந்தெடுக்கும் பெங்காஸி நகரில் தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனாலும் இம்முறை ஆர்ப்பாட்டம் செய்த குறித்த இடம் பாதுகாப்பு பிரதேசத்துக்குட்பட்டது. நூற்றுக் கணக்கானவர்கள் ஏவுகணைகள், கைக்குண்டுகள், துப்பாக்கிகள் சகிதம் பெங்காஸியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உணர்வுகள் உச்சத்தைத் தொட கையிலிருந்த கைக்குண்டுகளும், ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் தூதரக வளாகத்தைப் பதம்பார்த்தன. கம்பத்தில் சோகமாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க கொடி கீழிறக்கப்பட்டு கிழித்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

தூதரகம் தீயில் கருகியது. இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தூதரகத்தை தீயிலிருந்து மீட்பதற்குள் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீபன் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் 4 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரைப் பலிகொடுத்தனர். 

இது இவ்வாறிருக்க குறித்த அதே நேரத்தில் எகிப்திலும் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அமெரிக்க தூதரக வளாகம் இம்முறை தஹ்ரீர் சதுக்கம் செய்யும் பணியினை செய்தது என்றால் கூட பிழையிருக்காது.  அரைக் கம்பத்தில் சோகையிழந்து அசைந்து கொண்டிருந்த அமெரிக்க தேசியக் கொடிக்கு பதிலாக கறுப்புக் நிற கொடி ஏற்றப்பட்டு அ@மரிக்க தேசிய கொடி தீயில் போடப்பட்டது. 

உடனடியாக உஷாரானது எகிப்திய காவல்துறை. கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுத்து நிறுத்தி தூதுவர் உள்ளிட்டோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். 

ஏன் எதற்கு இந்த கொலைவெறிப் போராட்டம்? ஒருவரின் உணர்வுகளோடு விளையாடும்  போது இப்படித்தான் வெளிப்பாடுகள் இருக்கும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்)  அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராகவே இத்தனை ஆர்ப்பாட்டங்கள். 

முஹம்மத் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் இவ்வாறான திரைப்படங்களும் கேலிச்சித்திரங்களும் ஒன்றும் புதிதல்ல. எனினும் காத்திரமான நடவடிக்கைகள் இல்லாததால் இவ்வாறான இழிவான நடவடிக்கைகள் முஸ்லிம்களை துரத்திய வண்ணமுள்ளன. 

உண்மையில் இத்திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பான சந்தேகமும் இருக்குமல்லவா? இஸ்லாத்துக்கெதிரான குறித்த திரைப்படம் தொடர்பில் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம்.

55 வயதான இஸ்ரேலிய அடிப்படையைக் கொண்ட தலைவர் நகவ்லா பாசிலி நகவ்லா. இவர் தான் இப்படத்தினுடைய தயாரிப்பாளர். இத்திரைப்படத்தினை தயாரிக்க அவருக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது. இந்த நிதித் தொகையானது சுமார் 100 இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து திரட்டப்பட்டிருப்பதாக மிக நம்பகரமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சாம் பாசிலி இஸ்லாம் ஒரு புற்றுநோய் இதனை வளரவிடக்கூடாது என கூறிய வார்த்தைகளும் ஊடகங்களில் பதிவாகியிருந்தது. 

2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தயாரான இந்த இரு மணித்தியாலங்கள் நீண்ட திரைப்படம் முஸ்லிம்கள் மனதை வெகுவாக புண்படுத்தியுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் செரிடோஸில் வசிக்கும் இவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏ.எப்.பி.சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. காசோலை மோசடி வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து விடுதலையான இந்த பாசிலி பாலைவன போர் வீரன் (ஈஞுண்ஞுணூt ஙிச்ணூணூடிணிணூ) என்ற ஒரு திரைப்படத்தை எடுப்பதாகக் கூறியே இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார். 

முஸ்லிமின் அப்பாவித்தனம் (ஐணணணிஞிஞுணஞிஞு  Oஞூ Mதண்டூடிட்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்புத் திரைப்படத்தை இயக்கியவர் பிரபல ஹொலிவூட் இயக்குனரான எலன் ரொபர்ட்ஸ். எனினும் பாலைவன போர் வீரன் (ஈஞுண்ஞுணூt ஙிச்ணூணூடிணிணூ) என்ற படத்தின் இயக்குனராகவே இவரது பெயர் பதிவாகியுள்ளது. 

எனினும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தாம் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்னரான போர் வீரனின் கதை என்று கூறி தங்களை இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் இது மத நிந்தனைகளைக் குறித்தான படம் என்பது தமக்குத் தெரியாது எனவும் நடிப்புக்குப் பின்னர் கதாப்பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் போன்றன மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அங்கலாய்க்கின்றனர். 
அனா குர்ஜி இத்திரைப்படத்தில் முக்கிய கதாநாயகி. ஜோர்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளம் மனைவியாக நடித்துள்ளார் இவர். இந்த ஜோர்ஜ் என்ற பாத்திரமே பின்னர் முஹம்மத் என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ள குர்ஜிக்கு இத்திரைப்படத்தில் நடிக்க கொடுக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 75 டொலர்கள். இவை தான் நடந்தவை. அடிதடி மசாலா படமாக விளக்கம் கொடுக்கப்பட்டு பின்னர் நடித்தவர்களுக்கே தெரியாமல் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையானது இஸ்லாத்துக்கெதிராக மிகத்திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு செயற்பாடே. 

முஸ்லிம்கள் இத்திரைப்படம் குறித்து விழித்துக் கொள்ள அல்லது போராட்டங்களை முன்னெடுக்க அவர்களது உணர்வினை தூண்டியது குறிப்பாக யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களில் ‘கூடஞு கீஞுச்டூ ஃடிஞூஞு Oஞூ Mதடச்ட்ட்ஞுஞீ, Mதடச்ட்ட்ஞுஞீ Mணிதிடிஞு’  என்ற பெயர்களில் வெளியான 14 நிமிட முன்னோட்டங்க@ள (கூணூச்டிடூஞுணூண்).

ஜூலை மாதம் சாம் பாசிலி என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள. குறித்த முன்னோட்டத்தை சுமார் 450,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.  அத்துடன் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி குறித்த அதே பயனரினால் அதன் அரபு வடிவம் உள்ளிட்ட மேலும் சில முன்னோட்டங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதனையும் பார்வையிட்டுள்ளனர். குறித்த முன்னோட்டங்களிலேயே நபியையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். அத்துடன் மொரிஷ் Œ@டக் எனும் அமெரிக்க வாழ் எகிதியர் இந்த முன்@னாட்டங்களை தனது ‘ஆடூணிஞ்ஞுணூ’ இல் வெளியிட்டதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் @மலும் தீவிரமடைந்தன.    

போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்தும் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த முன்னோட்டங்களை தனது பக்கங்களிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளமை கவலைக்குரியதே. 

 திரைப்படத்தை பொறுத்தவரை கேவலமான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு மேலதிகமாக, 2010  ஆம் ஆண்டு குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாரான டெரி  ஜோன்ஸின்  கருத்துக்களை நியாயப்படுத்தும்  காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தை விட எகிப்து தேவாலயமொன்றில் காண்பிக்கப்பட்ட “குருடனாக இருந்தேன் விழித்துக் கொண்டேன்” என்ற  அல்குர்ஆனையும் நபியையும் இழிவுபடுத்தும் நாடகமொன்றுக்கு எதிராகவும் எகிப்தியர்கள்  போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உலகளவில் இன்று தொடரும் ஆர்ப்பாட்டங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இத்திரைப்படத்தை வன்மையாக  கண்டித்துள்ளதுடன் இவ்வாறான திரைப்படங்களின் பின்னணியில் இரத்தக் களறியை தூண்டும் இனவாதிகள் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் பெங்காஸி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரை இழந்த அமெரிக்கத் தூதுவரின் இழப்புக்கு  பின்னால் அமெரிக்காவும் இது விடயத்தில் விழித்துக் கொண்டதெனலாம். வெள்ளை மாளிகை பேச்சாளர் குறித்த மத நிந்தனையை திரைப்படக் குழுவினர் மீது சுமத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருவதாக தெரிவித்ததிலிருந்து அதனை உறுதிப்படுத்த முடிகிறது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லிபியாவின் கடற் பிராந்தியத்துக்கு 2 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளார். மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிலை  கொண்டுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான 95 கம்பனிகளிலிருந்தே விசேட திறன் கொண்ட இவ்விரு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கொல்லப்பட்டாரா அல்லது புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் இறந்தாரா என்பதிலும் சர்ச்சை நீடிக்கிறது. எவ்வாறாயினும் இதற்குறிய  பொறுப்பை ஐணணணிஞிஞுணஞிஞு ணிஞூ Mதண்டூடிட் திரைப்படக் குழுவினரே ஏற்க வேண்டும்.

உலக அளவில் லிபியா, எகிப்து, யெமன் என ஆரம்பித்த போராட்டங்கள் சூடான், கட்டார் மொரோக்கோ, அவுஸ்திரேலியா, இந்தியா, சிரியா பலஸ்தீன், மலேசியா என நீண்டு கொண்டே செல்கின்றன.   எமது இலங்கைத் திருநாட்டிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன நாளையும் இடம்பெறவுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்களுக்கு  பலத்த பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கெதிரான போராட்டத்துக்கும் தூதுவராலயங்கள் மீதான தாக்குதலுக்கும் அல் - கைதா அழைப்பு விடுத்துள்ள நிலையில் தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ளப் போவதில்லையென ஒபாமா  குமுறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளைய தினம் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஷெ#க் யூசுப் அல் கர்ளாவி அழைப்பு  விடுத்துள்ளதுடன் இஸ்லாமிய மத நிந்தனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு சர்வதேச சட்டமொன்றின் அவசியத்தை சவூதி அரேபியாவின் பிரபல முப்தியொருவரும் துருக்கியின் பிரதமரான அர்துகானும் வலியுறுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி உணர்வுகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் வித்திட்ட இந்தத்  திரைப்படத்துக்கும் அதன் குழுவினருக்கும் நடவடிக்கை எடுப்பதை விடுத்து மக்களின் உணர்வுகளோடு  விளையாட அமெரிக்கா தயாராவது கவலைக்குரியது.  ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு இதன் பின்னர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டால் மட்டுமே முற்றுகையிடப்பட்ட அமெரிக்கத் தூதரகங்களுக்கும் தூதுவர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க முடியும். அத்துடன் (இத்திரைப்படத்துக்கு எதிராக) காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்  என வலியுறுத்தி எகிப்து ஜனாதிபதி முஹம்மது முர்ஸியும் தனது அமெரிக்க விஜயத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.

மத நிந்தனை செய்யும் இவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படுவதனூடாகவும் அவை தொடர்பில் வெளிப்படுத்தப்படவதனூடாகவும் ஆத்திரம் ஊட்டப்பட்டு 

அமெரிக்காவுக்கெதிரான வெறுப்பும் கொள்கைகளும் வளருமே தவிர முஸ்லிம்களிடத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை ஒருபோதும் உயர்த்தாது என்பது மட்டும் திண்ணம்.

நூற்றாண்டு காணும் மருதமுனை அல்-மனாரின் வரலாற்றுப்பதிவுகள்

1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இக் கட்டுரை பிர”ரிக்கப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது தனது கல்வி நடவடிக்கைகளை 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்தது. 50 மாணவர்களுடன் தொடங்கிய இப் பாடசாலை 1ம், 2ம் வகுப்புக்களை முதலில் ஆரம்பித்தது. இப் பாடசாலை ஆரம்பத்தில் மருதமுனை அரசினர் ஆண்கள் பாடசாலை என்று  பெயர் பெற்று இடைக் காலங்களில் பல்வேறு பெயர் மாற்றங்களுக்குட்பட்டு தற்போது அல் மனார் மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியாக பிரசித்தி பெற்ற இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்கு மருதமுனை மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த அதிகம் பேர் இன்று வரை பாடுபட்டு வருகின்றனர்.
அ@த@பான்று இன்று பல்@வறு துறைகளிலும் @தசிய மற்றும் சர்வ@தச ரீதியாக பிரகாசிக்கும் ஆயிரக் கணக்கா@னாரையும் இப் பாடசõலை கடந்த நூறு வருட காலத்தில் உருவாக்கியுள்ளது.
இப்பாடசாலை தொடங்கிய காலந்தொட்டு தமிழ் சகோதரர்களே அதிபர்களாக கடமையாற்றியிருந்தனர். 1949 ஆம் ஆண்டு முதலே இதே கிராமத்தைச் சேர்ந்த அதிபர்கள் கடமையாற்றினர். இப்பாடசாலையின் பதினைந்தாவது அதிபராக 1969 ஆம் ஆண்டு ஏ.எச். முகம்மது அதிபர் அவர்கள் தலைமையாசிரியராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். 
புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மூத்த மகன் எம். நயீம் சரிபுத்தீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியாக இப்பாடசாலையில் கடமையாற்றினார். இவர் தமிழ்ப்பாடத்தினை கற்பித்ததோடு சில காலம் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். இவரின் காலத்தில் வி.எம். இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து தமிழையும், வரலாற்றினையும் கற்பித்தார். இதே காலப்பகுதியில் ஏ.எல்.மீராமுகைதீன் ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவராக இருந்தார். கலைப்பட்டதாரியான இவர் பெரும்பாலான பாடங்களை கற்பித்துக் கொண்டிருந்தார். அடுத்த முக்கியமானவராக கே. அல்லாபிச்சை ஆசிரியர்  காணப்பட்டார். இவர் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து சமூகக்கல்வி போன்ற பாடங்களை கற்பித்தார்.
1970 களில் நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த மௌலவி ஆசிரியரான அஹமது லெவ்வை இப்றாலெவ்வை ஹாபிஸ் அவர்கள் மிகவும் முக்கியமானவர். சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டு வரையில் இஸ்லாம் பாடத்தை கற்பித்தார். இக் காலத்தில் ஏ.எம். அபூபக்கர் ஆசிரியர் அவர்களும் முக்கியமானவர். இவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகும். இதே காலப்பகுதியில் எம்.எஸ்.எம். நளீம் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருந்தார். மாணவர் சுற்றுலாக்களுக்கும் பொறுப்பாகவும் இருந்தார். பிற்காலத்தில் பிரதி அதிபராககவும் கடமையாற்றினார்.
 எஸ்.இசட். சக்காப் மௌலானா அவர்கள் அல் மனாரைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவர். இவர் எல்லா வகுப்புகளுக்கும் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் ஆற்றலுள்ளவராக இருந்தார். பாடசாலை மாணவர் மன்றம், கலை கலாசார நிகழ்வுகள் போன்வற்றிற்கு பெரிதும் உதவினார். பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். இக் காலத்தில் எஸ்.எம். பழீல் அவர்கள் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமை புரிந்தார். பாடசாலையில் தயாரிக்கப்பட்ட எல்லா ஆங்கிலக் கடிதங்களும் இவரின் கையினாலேயே தட்டச்சு செய்யப்பட்டன. அத்துடன் விளையாட்டுத்துறைக்கும் முக்கிய பங்காற்றினார். 
இதே காலப்பகுதியில் ஐ.எல்.ஹபீப் முகம்மது ஆசிரியர் அவர்கள் ஒரு இளைஞராக பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். எஸ்.எம்.எம். மத்தீன் ஆசிரியர்கள் தமிழை ஒரு பாடமாக கற்பித்ததோடு விளையாட்டுக்கு பொறுப்பாக இருந்து சாரணியத்தையும் வளர்த்தார். அடுத்து எஸ்.எம்.எம்.எச். பாரி மௌலானா அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இருந்து கணித பாடத்தை அனேக வகுப்புக்களுக்கு கற்பித்தார். மேலும் மாணவர் வசதிக்கட்டணத்திற்கும் சஞ்சிகை போன்ற எழுத்தாக்கங்களுக்கும் பொறுப்பாக இருந்தார். 
இதே காலப்பகுதியில் இ. உதுமாலெவ்வை அதிபர் அவர்கள் அல் மனார் மஹா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். ஆரம்பப் பிரிவின் அபிவிருத்திக்கு பெரிதும் பாடுபட்டார். இதே காலப்பகுதியில் எம்.ஏ.எம். ஜெலீல் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தை கற்பித்தார்.
அடுத்து காதர் இப்றாஹீம் ஆசிரியர் சமூகக்கல்வியை கற்பித்துக் கொண்டிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். 
 ஏ.எச்.எம். மஜீட் சேர் அவர்களும், மசூர் மௌலானா அவர்களும் கொழும்பு சென்று அமைச்சர் பதியுதீன் மஹ்மூதை  சந்தித்து மருதமுனை அல்ஹிறா வித்தியாலயத்தை அல்-மனார் மஹா வித்தியாலயத்தடன் இணைத்தனர். இப்பாடசாலை தற்போது அல் மனார் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக செயற்பட்டுவருகின்றது. அத்துடன் விஞ்ஞான வர்த்தக வகுப்புக்களை ஆரம்பிக்கவும், தளபாடங்கள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் உதவினார் என்பது இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடிய விடயமாகும். 
1976 ஆம் ஆண்டு ஏ.எச்.எம். மஜீட்  இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றார். 
 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். அமைச்சர் அவர்களின்  உதவியுடன் இப்பாடசாலையில் உயர்தர வகுப்பிற்கான விஞ்ஞான ஆயுவு கூடம் கட்டப்பட்டது. 
மஜீட் அதிபர் பாடசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெரும் சவால்கள் காத்திருந்தன. 1975ம் ஆண்டில் பெறுபேறுகள் திருப்தியில்லாததால் பெற்றோர் பாடசாலையின் மீது நம்பிக்கையற்றிருந்தனர். முதலில் அதிபர் அவர்களுக்கு பெற்றோரின் நம்பிக்கையைக்கட்டி எழுப்ப வேண்டிய தேவை நிரம்பியிருந்தது. எனவே 1976ம் ஆண்டின் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக க.பொ.த.சாதாரண தர மணவர்களுக்கு இரவு நேரங்களின் வகுப்புக்களை ஒழுங்கு செய்து இரவில் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்.
பெண் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மகளான சித்தி நூறு நஜீமா மிகவும் முக்கியமானவர். இவர் மருதமுனையின் முதலாவது மௌலவியா ஆசிரியராவார். இவர் இப் பாடசாலையின் பெண் மாணவிகளின் விஷேட தேவைகளுக்கு பொறுப்பாக இருந்ததோடு இஸ்லாம், அறபு போன்ற பாடங்களை கற்பித்தார். அடுத்ததாக திருமதி ஜரீனா ஆசிரியை மருதமுனையின் முதலாவது ஆசிரியையும் விஞ்ஞான பாடத்திற்கு பெயர் போனவருமாகும். இவர் பெண் மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாக இருந்தார்.
அ. முகம்மது சஹாப்தீன் ஆசிரியர் அவர்களும் அ. முகம்மது முஸ்தபா ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவர்களாகும். இருவரும் சகோதரர்கள். மூத்த சகோதரர் வர்த்தக பாடத்தினையும் இரண்டாமவர் சமூகக்கல்வி பாடத்தையும் கற்பித்தனர். அடுத்ததாக இளம் ஆசிரியராக எஸ்.எல். ஜலால்தீன் ஆசிரியர் அவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். இவர் பயிற்றப்பட்ட உடற்கல்வி ஆசிரியராவார். சுகாதாரமும் உடற்கல்வியினையும் கற்பித்தார். 
இதே காலப்பகுதியில் பாண்டிருப்பில் இருந்து வருகை தந்த மூன்று ஆசிரியர்கள் முக்கியமானவர். பிற்காலத்தில் இந்து மஹா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த திரு. சோமநாதர் பாக்கியநாதன் அவர்கள் விஞ்ஞானக்கல்விக்கு புத்துயிரூட்டியவர். இரண்டாமவர் திரு. பாலசுந்தரம் பொன்னம்பலம் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். இவர் 6 முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். மூன்றாமவர் செல்வி. பொன்னம்பலம் ஆசிரியை. இவரும் பாண்டிருப்பைச் சேர்ந்தவர். இவர் விஞ்ஞானம் மற்றும் மனையியல் பாடங்களை கற்பித்தார்.
ஏ.எம். முசாதீக் ஆசிரியர் கணித பாடத்தில் பயிற்றப்பட்டவர். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவும் கணிதக்கழகத்திற்கு பொறுப்பாகவும் இருந்தார். இவரும் இளவயதில் காலமானார். இதே காலப்பகுதியில் ஏ. அலாவுத்தீன் அவர்கள் பயிற்றப்பட்ட கைவினை ஆசிரியராவார். இவர் பாடசாலையின் தமிழ் தின நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். இதே காலப்பகுதியில் ஏ.எம். அப்துல்லா ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக கடமையாற்றினார். இவர் சமூகக்கல்வி பாடத்தினை கற்பித்தார். எஸ்.எம். மூசா ஆசிரியர் அவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவிற்கு இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் போன்ற பாடங்களைக் கற்பித்தார். இவர்களுடன் எம்.பி. முகைதீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இப்பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்தார்.  
பாடசாலை அதிபர் என்ற பொறுப்புக்கு மேலாக மஜீட் அதிபர் அவர்கள் பாடசாலை முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டுக் கொண்டிருந்தார். இதுவரை காலமும் பின்னேரங்களில் இரண்டு மணிக்கு பூட்டப்பட்ட பாடசாலைக் கலாசாரத்தை இரவு பத்து மணிவரை திறந்து வைப்பதற்கான ஏற்பாட்டினை செய்ததோடு விரும்பிய நேரம் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து போவதற்கான பழக்கத்தையும் ஏற்படுத்தினார். பொதுப் பரீட்சைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாராந்த, மாதாந்த பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு செய்தார். அக் காலத்தில் கணணி வசதி இல்லாததால் அதிபர் அவர்களே வினாப் பத்திரங்களை இரவு முழுவதும் இருந்து தட்டச்சு செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்தார்.
எனவே தொகுத்து நோக்கும் போது மருதமுனைக் கிராமத்தின் கல்வி மேம்பாட்டிலும் சமய கலாச்சார முன்னேற்றத்திலும், எதிர்கால சந்ததியினரின் சிறப்பானதும் ஒளிமயமானதுமான எதிர்காலத்திற்கு எமது மாணவச் செல்வங்களின் ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பண்பாட்டு விருத்திக்கும் மஜீட் அதிபர் அவர்கள் பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுக்கூறலாம். இவரின் சேவைகள் பாராட்டப்பட வேண்டியதும் பாடசாலை வரலாற்றுப் பதிவேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதுமாகும்.

- எம்.எம். நெபளல்SLPS, SLAS
மருதமுனை.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பெண்கள் தோற்றத்தில் பூக்கள் பூக்கும் அதிசய மரம்


ஆண்களுக்குத் தான் மட்டும் தானா பெண்கள் மீது ஆசை? ஏன் மரத்துக்கும் ஆசை என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்களா?

நாளுக்கு நாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் உலகில் எங்கேயாவது ஒரு மூளையில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை நம்புவதா? அல்லது நம்பாமல் விடுவதா என்ற பல்வேறு விதமான தெளிவின்மையில் நாங்கள் இருந்தாலும்.

அந்த விடயம் தொடர்பான உரிய ஆதாரங்களை உடனுக்குடன் காட்டும் போது நம்பித்தானே ஆக வேண்டும். அந்த இடத்திற்குச் சென்று அதனை கானோளியாக எடுத்து உங்களுக்கு காண்பிக்கும் போது உங்கள் பதிலை நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.


Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன.


அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது.

உண்மையை உறுதிப்படுத்த இந்த கானோளியைப் பாருங்கள்.........











வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Google Plus achieved 25 million user at one month

இன்று நாங்கள் இணையத்துடன் இணைந்து கொண்டால் எங்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது பேஸ்புக், டிவிட்டர் என்று இருந்த காலம் மாறப் போகிறது. 

நாங்கள் யாரும் எதிர்பார்க்க ஒரு புதிய சமூகத்தளம் எங்களிடம் வந்துவிட்டது. அதுதான் கூக்கிளின் பிளஸ். இதன் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை உலகத்தில் இந்தளவு எல்லையை அடைந்து விடுமென்று. அண்மையக் கணக்கெடுப்பின் படி 25 மில்லையன் வாசகர்கள் இங்கு இணைந்துள்ளார்கள் என்பதை சொன்னால் மிகையாகாது. 

இந்த வகையில் அண்மையில் மேற்கொண்ட ஆய்விகளின் மூலம் இந்த இலக்கை அடைந்துள்ளதாக பிரபல Comstore நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வாசகர்கள் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.  இது இணைய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பேஸ்புக் இந்த இலக்கை அடைய 3 ஆண்டுகளும், டிவிட்டர் 30 மாதங்களும், என இந்த நிறுவனம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. 

கூக்குள் பிளசிக்கு உலகம் தோரும் உள்ள வாசகர்களின் எண்ணிக்கை 


அமெரிக்கா- 6 மில்லியன் வாசகர்கள் 
இந்தியா - 3.6 மில்லியன் 
கனடா(UK) - 1 மில்லியன் 
ஜெர்மனி - 920,000
பிரேசில் - 180,000
பிரான்ஸ் - 500,000
தைவான் - 500,000 



எது எப்படியாக இருந்தாலும் இதுவரைக்கும் இந்த கூக்குள் பிளஸ் பரீட்சார்த்த பதிப்பாக இருப்பதுதான் இன்னும் ஒரு விடயமாகும்.


ஆகவே நீங்களும் இந்த வாசகர்களின் ஒருவராக வர வேண்டுமா உடனடியாக அனுப்புங்க  comment    பண்ணுங்க உங்க மின்னஞ்சலை உங்களுக்கு கூக்குள் பிளஸ் உறவு வரும்!















ஞாயிறு, 22 மே, 2011

Most rare Magic without any thing by Samsudeen from India


எங்கள் வாழ்க்கையில் பல்வேறுபட்ட விதவிதமான நவீன தொழில் நுட்பங்கள் கண்டு நாங்கள் வியந்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எந்த விதமான நவீனமும் இல்லாமல் சாதாரண பாணியில் எங்களுக்கு ஒரு விடயத்தை ஒருவர் செய்து காட்டும் போது எங்களுக்கு பார்க்க வேண்டும் தோனுமல்லவா? இந்தியாவைச் சேர்ந்த சம்சுத்தீன் என்பவரின் விந்தைகளும் விநோனதங்களும் தான் என்ன உங்களையே ஆச்சரியத்தில்  உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாமல் இருக்கும் இந்த வீடியோக்காட்சிகளை நாங்களும் கண்டு கழிக்க என்ன அவகாசம்  சன்ரீடி கமாராக்களின் கண்களில் மண்ணைத்தூவி மந்திர தந்திரங்கள் செய்யும் சம்சுத்தீனின் விந்தைகளை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைவோம்.  இங்கே கிளிக் பண்ணி பாருங்கள்



Blogroll