செவ்வாய், 30 நவம்பர், 2010
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010
மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும்
அவனால் சில நடவடிக்கைகளை விடாமல்
இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக்
கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட
அம்சமாகும்.
மனிதன்
தோன்றிய காலம் தொட்டு இந்த
பாலியல் நோய் இருந்து வந்தாலும்
ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை
என்பதும் ஒரு விசித்திரம். அவன்
உலகில் தோன்றிய காலம் தொடக்கம்
இறைவனால் பல வகையான அறிவுரைகள்
காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன.
இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய
சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான
நோயும் ஒன்றாகும்.
மேலும்
ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை
ஒழிப்பது என்பது யாராலும் முடியாத
காரியம். ஆனால் அதனைக் குறைக்க
முடியும் என்பது தான் கண்டு
கொண்ட உண்மையாகும்.
மனிதனினால்
தீர்க்கப்படாத பிரச்சினையில் இந்
நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின்
அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால்
அவனால் இதனை சரியான முறையில்
அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை
வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே
பாரிய சவாலாக விளங்குகின்றது.
உலகெங்கும்
33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும்.
இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின்
மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று
நோய் மேலும் பரவாமல் தடுக்கவும்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும்
டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ்
தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை
இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை
எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு
இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது.
2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம்
ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்.
20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின்
எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில்
25 வீதம் குறைந்துள்ளதாக
எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.
எயிட்ஸ்
அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க
நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில்
பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே
எனவும் இந்த ஐ.நா.
அமைப்பு அறிவித்துள்ளது.
ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா,
தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில்
அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
HIV/AIDS பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
§
இந்
நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண
குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண
குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
§
HIV தொற்று
ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள்
தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில்
ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய்
தொற்றலாம்.
§
நீங்கள்
HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால்,
HIV தொற்றிலிருந்து உங்களையும்
காப்பற்றலாம்.
§
எவ்வாறு
கடத்தப்படுகிறது
§
பாதுகாப்பற்ற
ஊடுருவும் வகையிலான உடலுறவு
§
குருதியேற்றலின்
போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு
மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப்
பொருள்களைப் பெறல்.
§
தோற்றடைந்த
ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய
உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
§
HIV தொற்றடைந்த
தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,
HIV/AIDS பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
§ கட்டித்தழுவுதல்.
§ முத்தமிடல்.
§ கை குலுக்குதல்.
§ உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
§ நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
§ ஒரே தடாகத்தில் நீந்துதல்.
§ மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
§
பாதுகாப்பற்ற
உடலுறவைத் தவிர்த்தல்.
§
பாலுறவில்
ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
§
ஆணுறைகளை
சரியாகப் பயன்படுத்துதல்
§
பாலியல்
மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.
செவ்வாய், 16 நவம்பர், 2010
Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்
நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள் வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவதற்கு தயாரிகியுள்ளது என்பது எமக்கு இனிப்பான செய்தியாகும். ”ஊர் இரண்டானால் கூத்தாடிக்கி கொண்டாட்டமாம்” இவர்கள் என்ன தான் சண்டை பிடித்தாலும் ”கீரைக்கடைக்கு எதிர் கடை இருந்தால் எங்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்பதில் ஐயமில்லை.
அவர்கள் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவது தொடர்பான அறித்தலை நிறுவர் மார்க் ஸூக்கர்பெர்க தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் மூன்று தினங்கள் நடைபெறும் இணையதள மாநாட்டில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் மெயில் சர்வீஸ், எஸ்.எம்.எஸ், சாட் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது.
எங்களுக்கு என்ன சிறந்த சேவை எங்களுக்கு கிடைத்தால் பேஸ்புக் நிறுவனம் என்ன கூக்குள் நிறுவனம் என்ன எல்லாம் ஒன்று தான்
ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் மெயில் சர்வீஸ், எஸ்.எம்.எஸ், சாட் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது.
எங்களுக்கு என்ன சிறந்த சேவை எங்களுக்கு கிடைத்தால் பேஸ்புக் நிறுவனம் என்ன கூக்குள் நிறுவனம் என்ன எல்லாம் ஒன்று தான்
புதன், 13 அக்டோபர், 2010
சுயமாக ஓடும் கார் கண்டுபிடிப்பு
சாரதியில்லாமல் சுயமாக ஓடக்கூடிய காரினை அமெரிக்காவின் கலிபோனியா மாணிலத்தில் கூக்குள் நிறுவனத்தின் சொப்வெயார் பொறியிலாளரான செமஸ்டின் கண்டுபிடித்துள்ளனர் அத்துடன் அதனை ஓடவைத்தும் பரீசோதனை செய்தும் பார்த்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
காரின் மேல்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள வீடியோக்கமரா, ராடர் கருவி, சுற்றவரச் செல்லுகின்ற வாகனங்களின் துாரத்தினை அளவிடக்கூடிய லேசர் கருவிகள் என்பன இவற்றில் பொருத்தப்பட்டிருந்தன. இருந்தும் இது ஒரு பரிசார்த்த நடவடிக்கையாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பலவகையான போக்குவரத்து நெரிசலிலும் (அமெரிக்காவின் சன்பரான்ஸின்) ஓடக்கூடிய வகையில் இந்த கார் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது எந்தவிதமான விபத்துக்களும் இல்லாமேலே ஓடியிருக்கின்றன. ஆனால் ஓரு தடவை மாத்திரமே இந்தக் காருக்குப்பின்னால் வந்த கார் இதனுடன் மோதியிருக்கிறது.
இத்திட்டத்தின் பிரதான நோக்கம் போக்குவரத்து பாதுகாப்பு முக்கியமே தவிரே வேறு எந்த நோக்கமும் எங்களிடமில்லை என இந்த பொறியிலாளர் தெரிவித்துள்ளார். இந்த கார் ஓடுவதற்கான போக்குவரத்தி வரைபடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டன, மற்றும் இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு வருடத்தில் 12லட்சம் பேர் வாகன விபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது வெற்றியடைந்தால் இந்த விபத்தின் அளவு குறைவடையும் எனவும் ஆர்வீடம் கூறுகின்றனர்.
மேலும் இது வெற்றியளித்தால் பல வகையான நன்மைகளை நாங்களும் பெற்றுக்கொள்ள முடியும்.
நன்றி BBC
புதன், 15 செப்டம்பர், 2010
Call Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்
இன்று உலகம் விரிவடைந்துள்ளது அது போல் மனிதனின் தொடர்பாடலும் விரிவடைந்து காணப்படுகின்றது. அவன் காலையில் எழுந்து, மாலை வரை அவனால் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக தனது உறவினருடன், நண்பர்களுடன், மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தனது காதலியுடன் இவ்வாறு பல்வேறு தரப்பினருடன் அவன் தனது தொடர்புகளை இன்று இணைத்துக் கொள்கிறான். இவ்வாறு பல வகையான தொடர்பாடல்கள் மேற்கொண்டாலும் அவனால் பேசப்படும் பல விடயங்கள் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தான் நண்பர்களுடன் மற்றும் உறவினர், காதலி, காதலன் போன்றோர்களிடம் பேசப்படும் பேச்சுக்களை திரும்பவும் கேட்க வேண்டும் அல்லது அவனது ஏதாவது ஒரு ஆதாரத்திற்கு அதனைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள தொடர்புகளை விருத்தி செய்து கொள்ள இன்று உலகில் அதிகளமான பயனாலார்கள் பயன்படுத்தப்படும் PC to PC and PC to Phone இப்படி பல்வேறுபட்ட இணைப்புக்களை மேற்கொள்ளும் நாம் இன்று எல்லாரோலும் பயன்படுத்தப்படுகின்ற Skype and Google Talk and Yahoo IM போன்றவற்றில் நாங்கள் உரையாடும் போது அந்த உரையாடல்களை Recording செய்து கொள்ள இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் Software பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை இங்கே பெற்றுக் கொள்ள முடியும்
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
தாய் மொழி தமிழில் எவ்வாறு அரட்டை அடிப்பது?
”தமிழுக்கு அமுதென்று பெயர், அது என் உயிருக்கு மேல்” என்பது எமது முன்னோர்களால் கூறப்பட்ட ஒரு வாக்கு இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த தமிழ் மொழியை பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழ் மொழியான 2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றைக் கொண்டும் காணப்படுகின்றது.
எங்களுக்கு எத்தனை மொழிப் புலமை இருந்தாலும் எனது தாய்மொழில் காட்டும் ஆர்வம் மற்ற மொழிகளை விட கூடுதலானவை என்பதில் எந்தவகையான சந்தேகமுமில்லை என்பது எனது எதிர்பார்பார்ப்பு. நானும் இருக்கும் போது தமிழ் மொழி பேசும் அன்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது சந்தோசமே அது எண்ணில் அடங்காது.
அத்துடன் நாங்கள் இன்று உலகில் பல்வேறு மொழிகள் நடைமுறையிலும் மற்றும் அதன் செல்வாக்கு காணப்பட்டாலும் எமது தாய்மொழி மூலம் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் எனத் தோன்றிலாலும். இல்லை நீங்கள் உங்கள் பற்றி தமிழ் பேசும் அன்பர் ஒருவருக்கு அல்லது தமிழ் பேசும் உலகத்திற்கு இணைய தளத்தினை உருவாக்கினாலும். உங்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு மென்பொருள் தான் இது இன்று இந்தியாவில் காணப்படுகின்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த மென்பொருள் நாங்கள் இலகுவான முறையில் யுனிகோட் அமைப்பில் எங்களால் வாமினி என்ற தமிழ் பொன்ட் ஊடாக இலகுவாக டைப் பண்ணக்கூடிய பல வசதிகள் இதில் காணப்படுகின்றது.
நீங்களும் இதனைப் பாவித்து அந்தப் பயனைச் சொல்லுங்களேன் பார்க்கலாம்.
1) Tamil
2) Telugu
3) Hindi
4) Kannada
5) Malayalam
6) Diacritic
7) Roman
NHM Writer
அதனை இங்கே தரயிறக்க
வியாழன், 9 செப்டம்பர், 2010
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் 2010.09.10
அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த 30 நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து இன்று அதற்கான பரிசுப் பொருளான ஈதுல் முபாறக் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் இன்றை தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
நோன்பும் அது தொடர்பான மான்புகளும் பற்றி உங்களுக்கு சிறிய வியடங்களை முன்வைத்து ஒரு சில நிமிடங்கள் நான் பங்கு கொள்ள ஆசைப்படுகிறேன்.
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.
இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.
இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.
நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.
உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
மேலே குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்பி நான் இத்துடன் முடிவுக்கு கொண்டு வருகின்றேன்
வஸ்ஸலாம்.
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
IP Address என்றால் என்ன?
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும். பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன. இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..
க்ளையனட் / சேவர் என்ன வேறுபாடு
இணையத்தில் இனைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் சேர்வர் / க்ளையண்ட் என இரு வகைப்படுத்தலாம். இணையத்தில் இணைந்துள்ள ஏனைய கணினிகளுக்கு சேவை வழங்கும் கணினிகளை சேர்வர் (Server) எனப்படுகிறது. இவற்றுள் வெப் சேர்வர் (web server) , மெயில் சேர்வர் (mail server) எனப் பல வகையுண்டு. அவ்வாறே இந்த சேர்வர்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினிகளை க்ளையண்ட் ( Client) எனப்படுகிறது.
.உதாரணமாக இணையத்தில் இணைந்து யாஹூ இணைய தளத்தைப் பார்வையிட விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் யாஹூ நிறுவனத்தின இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் சேர்வரையே அணுகுகிறீர்கள். அந்த சேர்வரே உங்களுக்கான சேவையை வழங்குகிறது. சேவையைப் பெற்றுக் கொள்ளும் உங்கள் கணினியை க்ளையண்ட் எனப்படுகிறது, இங்கு சில கணினிகள் சேர்வராகவோ க்ளையண்டாகவோ தொழில் படவும் வாய்ப்புள்ளது. ஒரு சேர்வர் இணையத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளையும் வ்ழங்கலாம். சேர்வரில் இயங்கும் மென்பொருள் வெப் சேர்வராக, மெயில் சேர்வராக (Mail Server) , எப்டிபி (FTP Server) சேர்வராக இயங்கலாம்.
ஐபி முகவரிகள் எண்களால் ஆனது. அது தசம எண்ணாகவோ அல்லது பைனரி இலக்கமாகவோ இருப்பினும் எண்களை நம்மால் நினைவில் வைத்திருப்பது இலகுவான விடயமன்று. இதனைக் கருத்தில் கொண்டே ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. இதனை டொமேன் நேம் சிஸ்டம் (Domain Name System) எனப்படும். இதற்காக டொமேன் நேம் சேர்வர் பயன்படுத்தப்படுகிறது. இந்த டொமேன் நேம் சேர்வர்கள் ஐபி முகவரிகளையும் அதற்குரிய டொமேன் பெயர்களையும் கொண்ட ஒரு தரவுத் தளத்தைப் பேணி வருகிறது. வெப் பிரவுஸரில் நீங்கள் ஒரு இணைய தள முகவரியை டைப் செய்யும்போது வெப் பிரவுசர் இந்த டொமேன் நேம் சேர்வரையே முதலில் அணுகுகின்றன. அந்த இணைய தள முகவரிக்குரிய ஐபி முகவரியைக் கண்டறியும் டொமேன் நேம் சேர்வர் அதனை வெப் பிரவுஸருக்குத் தெரியப்படுத்துகிறது. இங்கு சரியான ஐபி முகவரியைப் பெற்றுக் கொள்வதற்குப் பல டொமேன் நேம் சேர்வர்களின் பங்களிப்பு இருக்கும். ஒரு இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை நீங்கள் அறிந்திருந்தால் அதன் மூலமும் ஒரு இணைய தளத்தைப் பார்வையிட முடியும்.
ஐபி முகவரியை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து ஓகே செய்யுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் ipconfig என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த உங்கள் கணினியின் ஐபி முகவரியைக் காணலாம். ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே ஐபி முகவரியைக் காணலாம் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






